யாரும் எதிர்பார்க்காத விதமாக இயக்குனருக்கு தங்க சங்கிலியை பரிசளித்த சிவகார்த்திகேயன்.! அதுக்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருப்பது தெரியாம போச்சே.!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகனாக காலெடுத்து வைத்து தற்போது நிறைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன் இவர் விஜய் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் பின்பு காமெடி நடிகனாக தமிழ் சினிமாவில் களம் இறங்கி தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இவருக்கு தொடர்ச்சியாக வெற்றிகளைக் கொடுத்து வந்துள்ளது மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் டாக்டர் இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பல சினிமா பிரபலங்களும் சிவகார்த்திகேயனை பாராட்டியதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களையும் மக்கள்கள் பாராட்டி வந்தார்கள் என்று தான் கூற வேண்டும்.

மேலும் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடிக்கப் போவதாகவும் தகவல் வைரலாகி வரும் நிலையில் தற்பொழுது சிவகார்த்திகேயன் ஒரு இயக்குனருக்கு எதார்த்தமான சப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு ரியோ ராஜ் நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரித்து வழங்கிய திரைப்படம் தான் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா இந்த திரைப்படத்தை இயக்கிய யூடியூப் பிரபலமான கார்த்திக் வேணுகோபால் இத்திரைப்படத்தை மிகவும் சிறப்பாக இயக்கியிருந்தார்.

sivakarthikeyan
sivakarthikeyan

மேலும் சமீபத்தில் இவருக்கு கோயம்புத்தூரில் திருமணம் நடைபெற்றுள்ளது அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக சிவகார்த்திகேயன் அந்த திருமண விழாவில் கலந்து கொண்டு இயக்குனர் கார்த்திக்கிற்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment