“சென்னை எக்ஸ்பிரஸ்” படத்தில் மாஸ் காட்டிய பிரபலத்தை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன் படக்குழு.! எந்த படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர் தெரியுமா.? முழு தகவல் இதோ.

0

சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்தாலும் மக்களின் மனதை வென்று உள்ளதால் நடிகர் என்ற அந்தஸ்தை வெகுவிரைவிலேயே பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மீடியா உலகில் ஏற்கனவே பயணத்தில் இருந்ததால் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு உணர்ந்து இருந்தார்.

மேலும் ரஜினியை ரோல்மாடலாக வைத்து என்ட்ரி ஆகியுள்ளதால் ரஜினி எதை பண்ணினாரோ அதையே தற்போது சிவகார்த்திகேயன் செய்து வருகிறார்.  சிவகார்த்திகேயன் தனது பெரும்பாலான திரைப்படங்களில் காமெடி,காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த தேர்தெடுத்து நடிப்ப்டுத்தால் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்கிறார்.

இதையே தான் ரஜினியும் பல வருடங்களாக செய்து நம்பர் ஒன் இடத்தில் தற்போது ஜொலிக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.  முதலில் டாக்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது அதை தொடர்ந்து டான், அயாலன் போன்ற திரைப்படங்கள் உடனடியாக முடிந்து அடுத்து அடுத்து வெளிவரும் என கூறப்படுகிறது.

முதலில் டான் வெளிவரும் என கூறப்படுகிறது.  டான் திரைப்படத்தை  அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி எடுத்து வருகிறார்.  அதன் பிறகு சிவகார்த்திகேயன் கே.ஜே. ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கு “சிங்க பாதை” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்  ஷாருக்கான் படத்தில் பணியாற்றிய பிரபலம் சிவகார்த்திகேயன் படத்தில் இணைய உள்ளாராம்.  அந்த பிரபலம் வேற யாரும் இல்ல சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒளிப்பதிவு செய்த “டுட்லி” தான் தற்போது சிவகார்த்திகேயன் படத்தையும் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.