தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கட்டும் நடிகைகளாக இருக்கட்டும் பலர் ஆரம்ப காலகட்டத்தில் வெறும் 600 ரூபாய் மற்றும் 5000 போன்ற சம்பளத்திற்கு வேலை பார்த்து எடுப்பார்கள். இப்படி பலர் வாழ்க்கையில் நடந்துள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி உட்பட இன்னும் பலர் இருக்கிறார்கள்.
அந்தவகையில் பொக்கிஷம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிந்துமாதவி. இவர் சட்டம் ஒரு இருட்டறை,வெப்பம்,கழுகு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இப்படங்கள் இவருக்கு சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை தரவில்லை.பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து குணச்சித்திர வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் டீச்சர் கதாபாத்திரதில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிந்து மாதவி இவர் ஆந்திராவில் விஐடி வேலூர் இன்ஸ்டியூட்டில் படித்துள்ளார். அதன் பிறகு சில விளம்பரங்களில் நடித்தார். பின்பு வேலை இல்லாத காரணத்தினால் சரவணன் ஸ்டோர் போட்டோ மாடலிங்காக 5000 ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றியுள்ளார்.