ரஜினியின் குரலில் ஜீவாவின் திரைப்படத்திற்கு டப்பிங் செய்த சிவகார்த்திகேயன்.! அதுவும் எந்த திரைப்படத்தில் தெரியுமா.?

0

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஜீவா இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது அந்த வகையில் பார்த்தால் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி, சிங்கம் புலி, கீ, கொரில்லா போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

நடிகர் ஜீவா ஆரம்ப காலகட்டத்தில் நடித்த நிறைய திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை தந்தாலும் தனது விடா முயற்சியினால் அடுத்தடுத்த திரைப்படங்களில் ரசிகர்களை கவர்ந்து விட்டார் அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முழு ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இவர் நடித்த நிறைய திரைப்படங்களில் இவருடன் இணைந்து சந்தானமும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜீவா நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி கடந்த 2009ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது.

இந்த திரைப்படத்தில் ஜீவாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது மட்டுமல்லாமல் ஜீவா இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் ஜீவா படையப்பா படத்தில் வரும் ரஜினி போலவும் அனுயாவும் படையப்பா திரைப்படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணனை போல நடித்திருப்பார்கள்.

jeeva
jeeva

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி தான் ஒரு தகவல் கசிந்துள்ளது அதாவது இவர்கள் நடித்த இந்த கதாபாத்திரத்தில் குறிப்பாக இந்த காட்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினி போல பேசி டப் கொடுத்துள்ளாராம். மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயன் ரஜினியின் குரலில் பேசினாரா எனக் கூறி வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த திரைப்படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிரோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.