சிவகார்த்திகேயனின் டான் வெறித்தனமாக வெளியாகிய மாஸ் அப்டேட்.!

தமிழ் சினிமா உலகில் காமெடியனாக நடித்து தற்போது கதாநாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாக உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் வைத்திருக்கும் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனமும் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

இதனையடுத்து இந்த திரைப்படத்தில் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிகர் சூரி,சமுத்திரக்கனி போன்ற பல சினிமா பிரபலங்கள் இதில் நடித்து வருகிறார்கள் இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடந்து முடிந்துள்ளது.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இணையத்தில் இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

sivakarthikeyan
sivakarthikeyan

Leave a Comment