கிட்னியை ஆட்டையை போடும் சிவகார்த்திகேயன்.! வெளியானது டாக்டர் படத்தின் மாஸான ட்ரைலர்.!

0

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு இணையாக இவர் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் சிறந்த என்டர்டைன்மென்ட் நடிகர் என்றால் அவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர் அந்தளவு பெயர் பெற்றுவிட்டார்.

மேலும் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் படியான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அடுத்த கட்டத்திற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

சிவகார்த்திகேயன் முதன் முறையாக இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஏலியன் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஆர் ரவிக்குமார் இயக்குனர் இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு டான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டான் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அப்படி இருக்கும் நிலையில் வருகிற அக்டோபர் 9ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார் அதனால் படத்தின் எதிர்பார்ப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் எஸ்கே ப்ரொடக்ஷன் இணைந்து  தயாரித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் யோகி பாபு, விஜய் டிவி புகழ், அர்ச்சனா, தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.