அதிகாரபூர்வமாக வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலிஸ் தேதி இதோ.!

தமிழ் சினிமா உலகில் முதலில் தொகுப்பாளராக இருந்து பின்பு நிறைய திரைப் படங்களில் காமெடியனாக இருந்து தற்போது கதாநாயகனாக நிறைய திரைப்படங்களில் நடித்து வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை,மிஸ்டர் லோக்கல்,நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான போது இவரது ரசிகர்கள் அந்த திரைப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

இந்நிலையில் தமிழக தேர்தல் காரணமாக இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 26 இல்லை படக்குழுவினர்களிடம் இருந்து ஒரு தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து தற்போது அதிகாரபூர்வ ஒரு தகவல் வெளியாகியுள்ளது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கியுள்ள டாக்டர் திரைப்படம் வரும் மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப் போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையடுத்து இந்த தகவல் தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

Leave a Comment