சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் மிரட்டலாக வெளியாகிய DOCTOR பட பர்ஸ்ட் லுக்.! வைரலாகும் போஸ்டர்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்தனர் முதலில் இவர் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார், அதன் பிறகு சினிமாவில் கால்தடம் பதித்தார்.

இந்த நிலையில் தற்போது கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இது திரைப்படத்தை ஸ்டூடியோ நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்சன் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக 11.03 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தார்கள், இந்த நிலையில் தற்போது டாக்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் கையில் கத்தியுடன் ரத்தத்துடன் ஒரு சோபாவில் அமர்ந்து உள்ளார், இவரின் பக்கத்தில் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் கத்தி ஆகியவை இருக்கின்றன.

இதோ அந்த போஸ்டர்.

Leave a Comment