அஜித்துடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன்.! அதுவும் இந்த திரைப்படத்திலா.! இதுவரை யாரும் பார்த்திராத அறிய புகைப்படம்.

0

Sivakarthikeyan, co-starring Ajith. In this movie too.! Photo of no one ever seen:விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி தனது விடாமுயற்சியின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வெள்ளித் திரைக்கு வருவதற்கு முன்பே இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது என்பதை அனைவரும் அறிந்ததே. தனது பேச்சாலும்,  நடிப்பாலும், நடனத்தாலும் அனைவரையும் கட்டிப் போட்டவர்.

இவர் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ என பல படங்களின் வெற்றியை தொடர்ந்து. தற்போது இவர் நடித்துவரும் திரைப்படம் டாக்டர். இத்திரைப்படம் முழுக்க முழுக்க மருத்துவர்களின் அற்பணிப்பு பற்றிய படமாகும்.

தற்போது வீட்டிலே முடங்கியுள்ள சினிமா பிரபலங்களின் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் அஜித் போட்டோகிராஃபர் சிற்றரசு தமிழ் பற்றிய ஒரு புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் கை நிறைய புத்தகங்களை வைத்துக் கொண்டு கண்ணாடி அணிந்து கொண்டு அஜித்தின் முன் வந்து நிற்கிறார். அந்தப் புகைப்படம் ஏகன் திரைப்படத்தில் இருந்து வெளியானது என கூறப்படுகிறது. மேலும் ஏகன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உள்ளார் ஆனால் இந்த காட்சி திரைப்படத்தில் வெளியாகவில்லை. தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

sivakarthikeyan-tamil360newz
sivakarthikeyan-tamil360newz