சிவகார்த்திகேயனை நம்பி வீட்டில் தங்கிய முன்னணி நடிகை.! சொக்கத்தங்கத்தை உரசி பாக்குறீங்களே உண்மையை உடைத்த பிரபலம்..

sivakarthikeyan : தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாத காலமாக உலுக்கிய செய்தி என்னவென்றால் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனைதான் அதாவது இமான் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் அதனால் இனிமேல் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என மொட்டையாக கூறிவிடுகிறார். இதனால் பல தரப்பினர்களும் அப்படி என்ன துரோகம் செய்தார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

அதிலும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் சிவகார்த்திகேயன் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும் அதனால்தான் இமான் மற்றும் மற்றும் முன்னாள் மனைவிக்கு விவாகரத்து ஆனதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்கள் அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் இமான் கொடுத்த பேட்டியை நீக்க சொல்லி மிரட்டியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் பெண்கள் விஷயத்தில் ஸ்ரிட்டாக இருப்பவர் என ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அந்த வகையில் இமானின் நண்பர் ஒருவர் சிவகார்த்திகேயன் பற்றி உண்மையை புட்டு புட்டு வைத்துள்ளார் அவர் கூறியதாவது நான் கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் சந்தித்த பொழுது அவர் தங்கியிருந்த வீடு சிவகார்த்திகேயன் வீடு தான் கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகாவும் ஒரு நடிகை தான் சிவகார்த்திகேயனின் நல்ல குணத்தை வைத்து தான் அவர் சிவகார்த்திகேயன் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

அந்த சமயத்தில் சிவகார்த்திகேயனின் மனைவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் சேர்ந்து இருப்பார்கள் பெண்கள் விஷயத்தில் நல்ல நேர்மையான மனிதர் என கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் ஏ ஆர் ரகுமான் எப்படி பெண்கள் விஷயத்தில் நல்ல பெயர் இருக்கிறதோ அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கிறது அந்த நம்பிக்கை தான் கீர்த்தி சுரேஷ் அவரது அம்மா சிவகார்த்திகேயன் வீட்டில் தங்க அனுமதித்துள்ளார்.

அப்பா இறந்த பின் அக்கா வளர்ப்பில் வளர்ந்த சிவகார்த்திகேயன் எந்த ஒரு வக்கிரபுத்தியும்  கீழ்த்தரமான எண்ணமோ அவர் ரத்தத்தில் கிடையாது சினிமாவில் இருந்து கொண்டு மது, சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்து வருகிறார் தனுஷ் அனிருத் எல்லாம் சிவகார்த்திகேயன் நண்பர்கள் தான் அவர்கள் பத்தி எங்கேயாவது வாய்விட்டு இருப்பாரா சிவகார்த்திகேயன் இமான்னுக்கு சிவகார்த்திகேயன் கேரக்டர் என்ன என்பது தெரியும் தன்னை பற்றி பல விஷயங்கள் தெரிந்தும் பிரஸ்மீட் வைத்து கூற மாட்டார் என்பது தெரிந்துதான் துரோகம் செய்துவிட்டார் என ஒரு பழியை போட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் ப்ரோமொஷனை கெடுப்பதற்காக தான் இப்படி ஒரு திட்டம் போட்டு லாரி இமான் துரோகம் செய்தார் என்று தானே கூறினார் அது என்ன துரோகம் என்பதை வெளிப்படையாக பேச வேண்டியதுதானே என இமானின் நண்பர் வெளிப்படையாக பேசி உள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்