கொட்டும் மழையில் தன்னுடைய மனைவியுடன் பிரின்ஸ் படத்தை பார்க்க வந்த சிவகார்த்திகேயன்.! வைரலாகும் வீடியோ

குறுகிய காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் போஸ்ட் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனை பலரும் ஆரவாரத்துடன் கொண்டாடி படத்தை மகிழ்ந்து பார்த்து வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் ரசிகராக தனது மனைவியுடன் திரையரங்கிற்கு சென்று பிரின்ஸ் படத்தை பார்த்து ஆராவரத்துடன் கொண்டாடியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அரங்க அதிர ரசிகர்கள் கத்தும் சவுண்டு மட்டுமே கேட்கும் அளவிற்கு ரசிகர்கள் அரங்கத்தை அதிர வைத்துள்ளனர். நகைச்சுவை கலந்த ஒரு காதல் திரைப்படமாக உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் பிரின்ஸ் திரைப்படம் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தீபாவளி முன்னிட்டு வெளியாகும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

இந்தப் படத்தில் உக்கரை நாட்டை சேர்ந்த மரியா அவர்கள் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு திரைப்படத்திலும் புது புது நடிகைகளை களமிறக்கி தனது படங்களில் ஏதாவது ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்து வருகிறார்.

அப்படி உருவான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் ரசிகராக பிரின்ஸ் படத்தை பார்த்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment

Exit mobile version