தனுஷுக்காக போட்ட ஒரே ஒரு ட்வீட்டால் சூர்யா ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்.! ஆத்தாடி காதுல ரத்தம் வந்துரும் போல

0

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் தன்னுடைய பணியை தொடங்கி மிகவும் கடினப்பட்டு தன்னுடைய விடாமுயற்சியால் அயராத உழைப்பாலும் வெள்ளித்திரையில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவரை என்டர்டைன்மென்ட் நடிகர் என பலரும் கூறுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனை சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், அந்தளவு தனக்கான ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார் சிவகார்த்திகேயன், சமீபகாலமாக சிவகார்த்திகேயனுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு திரைப்படம் ஓடவில்லை அதனால் மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பதற்காக கஷ்டப்பட்டு வருகிறார்.

sivakarthikeyan
sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமல்லாமல் படத்தை தயாரிப்பதும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அவர் தயாரிக்கும் படங்களில் புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கடந்த ஜூலை 28 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய தனுஷ் அவர்களுக்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார்.

இந்த ஒரே ஒரு டிவிட்டால் சூர்யா ரசிகர்கள் சிவகார்த்திகேயனை திட்டி தீர்த்து வருகிறார்கள், ஏனென்றால் சூர்யாவின் பிறந்த நாளுக்கு சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு வாழ்த்தும் கூறவில்லை அப்படியிருக்கும் நிலையில் தனுஷிற்கு மட்டும் வாழ்த்து கூறியதால் பல ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.

அதிலும் ஒரு சில ரசிகர்கள் உங்க மேல சூர்யா ஃபேன்ஸ் வச்சருந்த ரேஸ்பெக்டட் நீங்களே கெடுத்து கிட்டிங்க அண்ணா உங்களைவிட சீரான நிலைமையில் சூரிய சாரா பாக்குறீங்க இப்படியே காலம் எங்களுக்கு இல்ல சூரரைப்போற்று ஹிட்டடித்த அதன்மூலம் தருவாங்க பதிலடி என கூறியுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர்கள் தனுஷ், விஜய், அஜித் சார் இவங்க எல்லாரையும் விஷ் பண்ண உங்களுக்கு டைம் இருக்கு ஆனால் சூரிய annaவ விஷ் பண்ண டைம் இல்லையா உங்கள ரொம்ப பிடிக்கும் சார் இப்படி பண்ணிட்டீங்களே எதுக்கு சார் விஷ் பண்ணல ப்ளீஸ் சொல்லுங்க எங்கள மாதிரி உங்க ஃபேன்ஸ் கிட்ட பேசுங்க எதுக்குன்னு சொல்லுங்க ப்ளீஸ் என கூறி உள்ளார்.