சிவகார்த்திகேயன் பல உண்மைகளை மறைத்து விட்டார்.! அதிரடியாக கிளம்பிய ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல்

sivakarthikeyan
sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் ஞானவேல் ராஜா மீது மனுதாக்கல் ஒன்று செய்துள்ளார் அதாவது மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடித்ததற்காக 4கோடி ரூபாய் சம்பள பாக்கியை தராமல் இருக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது. அதனால் ஞானவேல் ராஜா மீது சிவா புகார் கொடுத்தார். இந்த நிலையில் ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2018 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மிஸ்டர் லோக்கல் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு விமர்சனங்களை பெற்றது இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு பதினைந்து கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது இந்தநிலையில் 11 கோடி ரூபாய் சம்பளம் தர பட்டதாகவும் மீதி இருக்கும் 4 கோடி ரூபாயை இன்னும் தரவில்லை எனவும் பலமுறை சிவகார்த்திகேயன் ஞானவேல்ராஜா அவர்களிடம் கேட்டுள்ளார் அதற்கு ஞானவேல்ராஜா பலமுறை இழுத்தடித்துள்ளார் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.

மேலும் இது குறித்து வருமானவரித்துறை தனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் 11 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததற்கான டிடிஎஸ் பத்திரத்தை தயாரிப்பாளர் தாக்கல் செய்யவில்லை எனவும் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனுவில் அதிரடியாக கூறியுள்ளார்.

இந்த மனுவுக்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார் அதில் நடிகர் சிவகார்த்திகேயன் பல உண்மைகளை மறைத்து என் மீது பொய்யான வழக்கு தொடர்ந்துள்ளார் எனவும் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அதிரடியாக இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு கொண்டு வரவேண்டும் எனவும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதே போல் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.