வெள்ளித்திரையில் பல நடிகைகளும் தற்பொழுது போட்டி போட்டு பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்கள் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் பல நடிகைகள் தங்களது ஆரம்ப காலகட்ட வாழ்க்கையில் சாதாரண வேலைகளை தான் பார்த்து வந்துள்ளார்கள்.
அதேபோல் தமிழ் சினிமாவில் உள்ள ஒரு நடிகை சரவணா ஸ்டோர் கடையில் மாதம் 5,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்துள்ளார்.ஆம் யார் அந்த நடிகை என்று கேட்டால் வேறு யாருமில்லை பிந்துமாதவி தான் இவர் தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவர் கஷ்டப்படும் காலத்தில் சரவணா ஸ்டோரில் மாதம் ஐயாயிரம் ரூபாய்க்கு வேலை பார்த்து வந்துள்ளாராம்.சினிமா துறையில் இவர் பொக்கிஷம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பிறகு சட்டம் ஒரு இருட்டறை,வெப்பம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு தனது முகத்தை பதியவைத்தார்.விமலுக்கு ஜோடியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருப்பார் மேலும் கழுகு திரைப்படத்தில் நடித்த போதுதான் இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.
அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் ஒரு சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் கேடி பில்லா கில்லாடி ரங்கா,வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்பொழுது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு சரவணா ஸ்டோரில் போட்டோ மாடலிங் துறையில் பணியாற்றியுள்ளாராம் அதனைத் தொடர்ந்து டாடா கோல்ட் டீ போன்ற விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

அப்பொழுதுதான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இவ்வாறு இவர் இருந்து வந்துள்ளார் என்ற தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும்இவருக்கு இப்படி ஒரு கஷ்டம் இருந்ததா எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது எனக் கூறி வருகிறார்கள்.