சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருவி இயக்குனர் இயக்கும் 3வது படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0

நடிகர் சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை சன் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதை தொடர்ந்து தயாரிப்பதிலும் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார், இவர் முதலில் தயாரித்த கனா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, இதனை தொடர்ந்து youtube பிரபலங்களை வைத்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படத்தை தயாரித்து இருந்தார்.

இந்த நிலையில் தனது தயாரிப்பு நிறுவனத்தை வைத்து மூன்றாவது முறையாக அருவி பட இயக்குனர் தம்பி பிரபுவை வைத்து தயாரிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு ‘வாழ்’ என டைட்டில் வைத்துள்ளார்கள், இதன் ஃபர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.,மேலும்  நடிகர் மற்றும் நடிகைகள் விரைவில் படக்குழு அறிவிப்பார்கள் என தெரிகிறது.