தமிழ்சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன், தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் திரைக்கு வந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது,
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக பிஎஃப் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்துள்ளார், படத்தை கே ஜே ஆர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதற்கு முன் ஹீரோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் உள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது, இந்த திரைப்படம் வெளியாகி சர்ச்சையை சந்திக்கும் என தெரிகிறது ஏனென்றால் இதே தலைப்பில் விஜய்தேவரகொண்டா தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த செகண்ட் லுக் போஸ்டர்.
