லியோவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்.! எப்ப சாமி உங்க அக்கப்போர் தாங்க முடியல..

Leo vs sivakarthikeyan : இசையமைப்பாளர் இமான் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தம்பி என நினைத்து நம்பினேன் அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார். இந்த விஷயம் தான் தற்பொழுது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் இமான் கூறியதாவது இந்த ஜென்மம் இல்லை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்.

சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்தை என்னால் ஒருபோதும் ஜீரணித்துக்கொள்ள முடியாது இது குறித்து சிவகார்த்திகேயனிடம் நான் கேட்டேன் உன்னை நம்பிய எனக்கு எனக்கு இப்படி ஒரு பச்சை துரோகத்தை செய்தாயே என கேட்டேன் அதற்கு சிவகார்த்திகேயன் சொன்னதை இப்பொழுது என்னால் வெளியே சொல்ல முடியாது.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய குழந்தைகளின் நலன் கருதி அதன் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நான் அமைதியாக இருக்கிறேன் இவ்வாறு இமான் கூறியது குறித்து பல செய்திகள் சமூக வலைதளத்திலும் இணையதளத்திலும் உலா வருகின்றன. அந்த வகையில் சிவகார்த்திகேயன் மூன்று திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே ஐஸ்வர்யாவிடம் ஏதோ சில்மிஷன் செய்தது போல் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் இமானின் முன்னாள் மனைவி மோனிகா சிவகார்த்திகேயன் சொன்னதில் என்ன தப்பு இமான் நாம் இருவரும் பிரிந்து விடக்கூடாது என்று தான் சிவகார்த்திகேயன் நினைத்தார் அதனால் தான் பஞ்சாயத்து பேசினார் ஆனால் சிவகார்த்திகேயன் மீது எந்த ஒரு தவறும் கிடையாது விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் இமானுக்கு ஒத்துழைக்கவில்லை நீதியின் பக்கம் அவர் நின்றார் அதனால் தான் இப்படி இமான் கூறுகிறார் என பேரும் குற்றச்சாட்டை வைத்துள்ளார் இமானின் முன்னாள் மனைவி மோனிகா.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் செய்தி பூதாகரமாக வெடித்துள்ளது லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது அதனால் சமூக வலைதளமான எக்ஸ் வலைதளத்தில் #leofdfs என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது ஆனால் சிவகார்த்திகேயன் குறித்து இமான் சொன்ன தகவல் தான் தற்போது சமூக வலைதளத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

அதனால் லியோ ஹேஷ் டேக்கை பின்னுக்கு தள்ளி சிவகார்த்திகேயன் ஹேஷ்டேக் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது இதனால் நெட்டிசன் பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.