சிவாஜி கணேசனுக்கு முதல் முறையாக “ஒரு கோடி” சம்பளம் கொடுத்து அழகு பார்த்த முன்னணி நடிகர்.!

Rajini : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் 72 வயதிலேயும் வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து கைவசம் மூன்று படங்கள் இருக்கிறது. ரஜினி சினிமா உலகில் யாரையும் பகைத்துக் கொண்டது கிடையாது.

தன்னுடைய சீனியர் தொடங்கி இளம் வயது நடிகர் இயக்குனர் என அனைவருக்கும் மரியாதை கொடுப்பார் குறிப்பாக இளம் இயக்குனர்களையே இவர் சார் என்றுதான் அழைப்பார் அப்படி சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது பேசிய நெல்சன் ரஜினி என்னை நெல்சன் சார், ஓகேவா சார் என அப்படித்தான் பேசினார் என கூறியுள்ளார்.

இப்படி அனைவருக்கும் மரியாதை கொடுக்கக்கூடிய ரஜினி படத்தில் ஒரு முன்னணி நடிகர் நடித்துள்ளார்.  அவருக்கு மரியாதை அதிகமாக கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு சம்பளத்தையும் அதிகமாக கொடுத்து அழகு பார்த்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

சிவாஜி கணேசன் சினிமாவில் பல கெட்டப்புகளில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி நடிகர் திலகம் என்ற பெயரை பெற்றார்.  இவர் கடைசியாக நடித்த படத்திற்கு சம்பளமாக 6 லட்சம் வாங்கி உள்ளார் அதன் பிறகு ஹீரோக்களுக்கு அப்பா, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்தார். அப்பொழுது 10 லட்சம் வாங்கியிருக்கிறார் கமலின் தேவர் மகன் படத்தில் நடித்தார் படம் வெளிவந்து வசூலில் சக்கபோடு போட்டது.

இந்த படத்தில் நடிக்க 20 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் அதன் பிறகு ரஜினியின் படையப்பா படத்தில் நடித்தார்.  இந்த படத்திற்காக ரஜினி அவருக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கித் தந்தாராம். கமல் கொடுத்ததை விட ஐந்து மடங்கு அதிகம் கொடுத்து சிவாஜி கணேசன் அவர்களையே ஆச்சரியப்பட வைத்தாராம். பிறகு என் வாழ்நாளில் அதிக சம்பளம் வாங்கிய படமாக படையப்பா இருக்கிறது என கூறினாராம் சிவாஜி.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்