படம் ஓடுமா என முதல் மரியாதை திரைப்படத்தை விமர்சித்த பிரபலங்கள்..! கோபத்தில் வார்த்தையை விட்ட சிவாஜி கணேசன்..!

sivaji ganesan mudhal mariyathai movie review: நடிப்பின் உச்சத்தை தொட்ட ஒரு நாயகன் என்றால் அது சிவாஜிகணேசன் தான். இவர் நடிப்பை பார்த்து அசராத ரசிகர்களே கிடையாது.  அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனிடம் பயிற்சி பெற்ற நடிகர்கள் ஏராளம்.

இவ்வாறு சிவாஜி கணேசன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி மிகப்பெரிய சாதனை படைத்த திரைப்படம் தான் முதல் மரியாதை. இத்திரைப்படத்தின் பாடலுக்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் ராதா மற்றும் வடிவுக்கரசி, சத்யராஜ் என பல பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.

இவ்வாறு அந்த இந்த திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.  இந்நிலையில் இந்த திரைப்படம் வெளிவரும் நிலையில் இந்த திரைப்படம் நல்லாவே இல்லை என்று இரண்டு பிரபலங்கள் கூரியது சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு கூறியது வேறு யாரும் கிடையாது இயக்குனர் பஞ்சு அருணாசலம் தான் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு படம் நல்லாவே இல்லை என்று இளையராஜாவிடம் கூறிஉள்ளார். அதன்பிறகு இளையராஜாவும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு யோசித்தாராம்.

ஆனால் சிவாஜி கணேசன் கொஞ்சம் கூட மனம் தளராமல் இந்த திரைப்படம் மெகா ஹிட் அடிக்கும் என நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் கூறினாராம். அவர் கூறியது போல இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

mudhal mariyathai
mudhal mariyathai

Leave a Comment