அஜித்தின் வீரம் படத்தில் நடித்த நடிகரை அண்ணாத்த படத்தில் இழுத்து போட்ட சிறுத்தை சிவா.? குஷியில் நடிகர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம்தான் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பல ஜாம்பவான்கள் நடிக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திதான் ஆனால் இந்த திரைப்படத்தில் மற்றும் ஒரு நடிகர் இணைந்து நடித்துள்ளார்.

அதன் தகவலை அவரே வெளிப்படையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது கூறியுள்ளார். அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம் திரை படத்தில் தல அஜித்துக்கு தம்பியாக நடித்தவர் பாலா. அதை தொடர்ந்து இத்திரைப்படத்தில் தற்போழுது நடித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் பல முன்னணி பிரபலங்கள் நடிகர்கள் பலரும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் அவர்களில் ஒருவராக தற்பொழுது களத்தில் இறங்கி வேலை செய்பவர் தான் பாலா.

இவர் இப்படி செய்துகொண்டிருக்கும் போது சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுபோன்ற இக்கட்டான கட்டாயத்தில் பலர் இறங்கி மக்களுக்கு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டார் இன்னும் பல தடவை நானும் இதில் சேர்ந்து பணியாற்ற ஆவலோடு இருக்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது மேலும் நான் அண்ணாத்த திரைப்படத்திற்காக சுமார் 15 கிலோ உடல் எடையை குறைத்து நடித்துள்ளேன் எனவும் கூறினார். சிறுத்தை சிவா இவரது அண்ணன் என்பது குறிப்பிடதக்கது முதலில் அஜித்துடன் நடித்த இவர் தற்போது ரஜினியுடன் நடித்து உள்ளார்.

Leave a Comment