அஜித் பட வில்லனை அண்ணாத்த படக்குழுவில் இணைத்த சிறுத்தை சிவா.! ரஜினிக்கு சேட்டவரா இந்த வில்லன்.! உறுதியான தகவல்.

நடிகர் அஜித்துடன் நான்கு திரைப்படங்களில் பணியாற்றி தன்னை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் படுத்துக் கொண்டார் இயக்குநர் சிறுத்தை சிவா.

இதற்கு முன்பு நடிகர் கார்த்தியை வைத்து சிறுத்தை என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டாலும் அது அவருக்கு ஒரே பெயராக அமைந்தது மட்டுமே முடிந்தது.

ஆனால் அஜீத் படத்தை இயக்கியதின் மூலமாகத்தான் அவர் இந்த இடத்திற்கு வந்தார் என்பது ஊரறிந்த விஷயம்.

கடைசியாக விசுவாசம் என்ற ஹிட் படத்தை கொடுத்தார். இதை தொடர்ந்து தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் இரவு பகல் பார்க்காமல் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட நிலையில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு 60% இருக்கும் பொழுது படத்தை தற்காலிகமாக நிறுத்தியது படக்குழு.

மேலும் ரஜினி நயன்தாரா போன்றோர் உடனடியாக சென்னை அழைத்து வரப்பட்டனர்.

அப்பொழுதிலிருந்து ஓரிரு மாதங்கள் எந்த ஒரு அப்டேட்டும் இந்த படத்தைப்பற்றி வெளிவராமல் இருந்த நிலையில் திடீரென இன்று படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

சென்னையில் கோலாகலமாக அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஜெகபதிபாபு கமீட் செய்துள்ளது படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் இதோ.

Leave a Comment