நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தனது 61 மற்றும் 62வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் முன்புறமாக இறங்கியுள்ளார் குறிப்பாக 61 வது திரைப் படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
இந்த படத்தை இந்த வருடமே வெளியிட வேண்டும் என்பதற்காக இயக்குனர் வினோத்திடம் ஒரு கட்டளையை வெளியிட்டுள்ளார் அதாவது இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கை 75 நாட்கள் அதற்குள் படத்தை எடுத்துவிட வேண்டும் என கூறி உள்ளார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அது அஜித்துக்கு 62வது திரைப்படமாக அமையும் என கூறப்படுகிறது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சிறுத்தை சிவா மீண்டும் அஜித்துடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் இதற்கு பிள்ளையார் சுழி போட பார்க்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் அஜித்துடன் இணைந்து ஒரு சிறப்பான படத்தை எடுக்க வேண்டுமென சன் பிக்சர்ஸ் நிறுவனம் முனைப்பு காட்டி வந்தது. அது அஜித் 62வது திரைப்படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருந்தது. ஆனால் நயன்தாரா அந்த வாய்ப்பை தனது காதலனுக்கு வாங்கி கொடுத்து விட்டார் அதனால் 63ஆவது திரைப்படம்.
நிச்சயமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பார் என கூறப்படுகிறது இந்த கூட்டணி அமைய அஜித் கேட்கும் சம்பளத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தந்துவிட்டால் போதும் நிச்சயம் இந்த கூட்டணி அமைந்து விடும். இந்த படத்தில் நயன்தாராதான் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.