சிறுத்தை சிவாவின் ஹாட்ரிக் சாதனையை தட்டி தூக்கு வாரா வினோத்.? அஜித்தின் முடிவு என்ன தெரியுமா.? எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்

0

கோடானகோடி ரசிகர்களை பெற்றவர் தல அஜித், ரசிகர் மன்றம் இல்லாமலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று இருப்பதால் இவரை தமிழ் சினிமாவே தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறது.

இந்த நிலையில் தல அஜித்தை வைத்து தற்பொழுது H.வினோத் வலிமை திரைப்படத்தை இயக்கி வருகிறார் இவர் இதற்கு முன் நேர் கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே அஜித்தின் திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அதிலும் அஜித்திற்கு ஒரு இயக்குனரை பிடித்து விட்டால் தொடர்ந்து தனது படங்களை இயக்க வாய்ப்புகளை வாரி வழங்குவார்.

valimai shooting spot
valimai shooting spot

அந்த வகையில்தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதலில் வெளியாகிய திரைப்படம் ‘வேதாளம்’ இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து விவேகம் திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தார் விவேகம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விசுவாசம் திரைப்படத்தை இயக்கினார். இப்படி தொடர்ந்து மூன்று திரைப்படங்களை இயக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார் சிறுத்தை சிவா.

அந்த வகையில் அடுத்ததாக வலிமை திரைப்படத்தை  அடுத்து அஜித்தின் படத்தை இயக்கி இயக்குனர் வினோத் ஹாட்ரிக் சாதனை படைப்பாரா என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறது. அதற்கு காரணம் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை வினோத் இயக்கியிருந்தார் அதனைத் தொடர்ந்து வலிமை படத்தையும் இயக்கி வருகிறார் மேலும் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்க அதிக வாய்ப்பு வினோத்துக்கு தான் இருக்கிறது என கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்க பல இயக்குனர்கள் வரிசைகட்டி நின்று கொண்டிருந்தாலும் அஜித்தின் தேர்வு மீண்டும் H வினோத் ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது அப்படி அடுத்த திரைப்படத்தை வினோத்தே இயக்கிவிட்டால் சிறுத்தை சிவாவின் ஹாட்ரிக் சாதனையில் வினோத்தும் இடம் பிடித்துவிடுவார்.

என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.