அடுத்தடுத்து மூன்று முன்னணி நடிகர்களை இயக்கும் சிறுத்தை சிவா.! இனிதான் ஆட்டம் ஆரம்பம்

நடிகர் கார்த்தி நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகிய திரைபடம் சிறுத்தை இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததால் சிவாவிற்கு சிறுத்தை சிவா என பெயர் வந்தது, சிறுத்தை சிவாவுக்கு இதுதான் முதல் திரைப்படம். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.

முதல் திரைப்படம் வெற்றி பெற்றதால் அடுத்ததாக தல அஜீத்துடன் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என நான்கு திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகிறார், இந்த நிலையில் தற்போது அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

சூப்பர் ஸ்டார் இயக்குனர் என்றால் சும்மாவா அடுத்தடுத்து படத்தை இயக்கும் வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கிறது, இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்திற்கு பிறகு மூன்று முன்னணி நடிகர்களின் படத்தை இயக்க போகிறாராம் சிறுத்தை சிவா, ஏற்கனவே தளபதிவிஜய் சிறுத்தை சிவாவிடம் கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம் இந்த திரைப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் குடும்ப திரைப்படமாகவும் அனைத்து மக்களும் ரசிக்கும்படி அமையுமென கூறுகிறார்கள் பொதுவாக விஜய் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்தால் சொல்லவே வேண்டாம் மெஹா ஹிட் ஆகும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், ஏனென்றால் குடும்ப பெண்கள் முதல் குட்டி குழந்தைகள் வரை விஜய் ரசிகர்கள் தான்.

siva
siva

இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் ஒரு திரை படம் கூட ஹிட் கொடுக்காமல் திணறிக் கொண்டு வரும் சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோரும் சிறுத்தை சிவாவிடம் சில கதைகளை கேட்டு உள்ளார்களாம் நடிகர் சூர்யாவுக்கு அயன் படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் அடையவில்லை அதைபோல் விக்ரமிற்கு தெய்வதிருமகள் திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் ஹிட இல்லை.

அதனால் அண்ணாத்த திரைப்படம் முடிந்ததும் அடுத்த மூன்று வருடத்திற்கு மிகவும் பிசியாக இருப்பார் சிறுத்தை சிவா இந்த மூன்று திரைப்படங்களைப் பற்றியும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை அதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Leave a Comment