விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் சிறுத்தை சூர்யா நடித்துள்ளார் தெரியுமா.? இதோ அந்த அரிய காட்சி…

0

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா, இவர் திரைப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளர், திரைக்கதையாசிரியர் என சினிமாவில் பன்முகங்கள் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளியாகிய சிறுத்தை திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர்.

தமிழில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததால் இவருக்கு சிறுத்தை சிவா என்ற பெயரும் கிடைத்தது, இதனைத் தொடர்ந்து வீரம், விவேகம், விசுவாசம் என பல திரைப்படங்களை கொடுத்துள்ளார், இவர் இயக்கிய  பல திரைப்படங்கள் அஜித்தை வைத்து தான் இயக்கி உள்ளார். இப்படி சிறுத்தை சிவா முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஆனால் ஒரு காலகட்டத்தில் படங்களிலும் நடித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்குனர் ஆவதற்கு முன்பு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் விஜய் நடிப்பில் அருண் பிரசாத் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் பத்ரி. இந்த திரைப்படம் விஜய்க்கு ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

விஜய் பத்ரி திரைப்படத்தில் தன்னுடைய அண்ணனுக்காக குத்துச்சண்டை வீரராக மாறுவார் அந்த திரைப்படத்தில் கடைசியில் நடிகர் விஜய் ஒருவரை தூக்கிக்கொண்டு ஓடுவார் அவரை இறக்கி விட்டதும் விஜயின் பயிற்சியாளர் வேறு ஒரு நபரை கை காட்டி அவரை தூக்கிக் கொண்டு ஓட செல்லும் பொழுது அவர் கையெடுத்துக் கும்பிடுவார்கள் அந்த காட்சியில் தோன்றியவர் தான் சிறுத்தை சிவா.

சிறுத்தை சிவா அந்த திரைப்படத்தில் மட்டுமல்லாமல் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த மனதை திருடிவிட்டாய் திரைப் படத்திலும் நடித்திருந்தார், இயக்குனராக தற்பொழுது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் சிறுத்தை சிவா குடும்ப பாங்கான திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அண்ணாத்த திரைப்படமும் குடும்ப பாங்கான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

siva
siva