மீனாவை தூக்க பிளான் போடும் சுதாகர்.! கடைசியில் முத்து விடம் வசமாக சிக்கி தர்ம அடி வாங்கிய சம்பவம்.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka aasai
Siragadikka aasai

Siragadikka aasai : இன்றைய எபிசோடில் முத்து மீனா வீட்டுக்கு வந்தது தெருஞ்சு பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் வந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர் பிறகு அவங்க போகும் போது மீனாவுடைய அம்மா கிட்ட என்ன மாப்ள நைட்டு வீட்டுக்கு போற மாதிரி தெரியல இங்கதான் இருப்பாரா என்று கேட்டு விட்டு போகின்றனர். பிறகு மீனாவுடைய அம்மா முத்து கிட்ட அப்பா ஃபோன் பேசினாரே வீட்டுக்கு வர சொல்லவில்லையா என்று கேட்க,

வர சொன்னாரு தான் அத்தை, ஆனா நான் போகல இங்கே தான் நைட் தூங்க போறேன் மீனா மொட்டை மாடிக்கு பாய் எடுத்துட்டு வா அங்க போய் தூங்கலாம் என்று சொல்லிவிட்டு முத்து மாடிக்கு போகிறார். பிறகு மீனாவுடைய அம்மா மாப்பிள்ளைய வீட்டுக்கு போக சொல்லு அவர் இங்கு இருந்தா உன் மாமியார் என்கிட்ட தான் சண்டை போடுவாங்க என்று சொல்ல..

அதெல்லாம் அவங்க என்ன சொன்னாலும் பார்த்துக்கொள்ளலாமா என்று சொல்லிவிட்டு மீனாவும் மாடிக்கு செல்கிறார். மீனா வீட்டுக்கு வந்த விஷயம் கந்து வட்டிக்காரன் சுதாகருக்கு தெரிந்து மீனாவ இன்னைக்கு நைட்டு தூக்கணும் என பிளான் போடுகின்றனர். பிறகு விஜயா மீனா அம்மாவுக்கு போன் பண்ணி ஆடி மாசத்துக்கு பொண்ண கூட்டிட்டு போக சொன்னா பின்னாடியே முத்துவையும் கூட்டிட்டு போயிட்டியா முத்துவ ஏதாவது சொல்லி வீட்டுக்கு வர சொல்லு என்று சொல்லுகிறார்.

அதற்கு மீனா உங்க பையன் மாடியில நல்லா தூங்கிட்டு இருக்காரு நாங்க கீழ தான் தூங்குறோம் காலைல பத்திரமா அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லிவிட்டு போனை வச்சு விடுகிறார். பிறகு சுதாகர் மீனாவை தூக்க மொட்டை மாடிக்கு வருகிறார் அங்கு போர்வைய எடுத்து பார்த்தால் முத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். உடனே முத்துவும் நீ வருவேன்னு எனக்கு தெரியும்டா என்று அந்த ஆளுகளை செம்ம அடி போட்டு புரட்டுகிறார்.

வெளிய சத்தம் கேட்குது என்று மீனா, அவங்க அம்மா, சத்யா, சீதா எல்லாரும் வெளியே ஓடி வராங்க, அப்ப முத்து காலையிலே இவனோட ஆளுங்க நோட்டம் பார்த்தாங்க அதான் இங்கே தங்கினேன் என்று சொல்கிறார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் வந்து இவனுக்கு இதே வேலையா போச்சு என்றும் சொல்கின்றனர், பிறகு சுதாகரும் அவருடைய ஆளுகளும் ஓடிவிட்டனர் முத்து நீங்க போய் இனிமேல் நல்லா தூங்குங்க வரமாட்டானுங்க என்று சொல்கிறார். இதோட இந்த எபிசோடு முடிந்துள்ளது