சிறை திரைப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார் படத்தின் கதை திரைக்கதையை இயக்குனர் தமிழ் எழுதி உள்ளார் படத்தை செவன் ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அது மட்டுமில்லாமல் சிறை திரைப்படத்தை பாராட்டி பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குனர் சங்கர் ஏற்கனவே இந்த திரைப்படத்தை பார்த்து எனக்கு கண்ணீர் வந்துவிட்டது படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களின் நடிப்பும் என்னை பிரமிக்க வைத்தது விக்ரம் பிரபு படம் முழுவதும் சிறப்பாக நடித்துள்ளார். எல் கே அக்ஷய் குமார் அனிஷ்மா அணில் குமாரின் அப்பாவித்தனமான நடிப்பும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது இப்படியான படத்தை கொடுத்த தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமாருக்கு பாராட்டுகள் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆர்கே செல்வமணி அவர்கள் சிறை திரைப்படத்தை பார்த்துவிட்டு நான் கூட எனது படங்களில் இஸ்லாமியர்களை வில்லனாக காட்டியுள்ளேன் முன்பு இருந்த காலகட்டத்தில் இருந்த தூண்டுதலில் நான் இப்படியான கதாபாத்திரங்களை வடிவமைத்து தவறு செய்து விட்டேன். நானும் போலீஸ் படம் எடுத்து இருக்கிறேன்.
ஆனால் சிறை திரைப்படம் பார்த்த பின்னர் எனக்கு ரொம்பவும் அவமானமாக இருந்தது சிறை படத்தில் இருக்கும் காவல்துறை காட்சி இந்திய ஒருமைப்பாட்டிற்கு சிறந்த உதாரணமாக இருந்தது இந்த காட்சி மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை காலில் இருக்கும் செருப்பை கழட்டி அடிச்ச மாதிரி இருந்திருக்கும் அவ்வளவு அழகாக அந்த திரைப்படத்தை எடுத்திருக்காங்க என பாராட்டியுள்ளார்.