7 நாட்களில் சிறை திரைப்படம் உலக அளவில் எவ்வளவு வசூல் தெரியுமா.

தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் விக்ரம் பிரபு, இவர் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த இறுகப்பற்று , டானாக்காரன், லவ் மேரேஜ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகிய திரைப்படம் சிறை. இந்த திரைப்படம் உண்மையான சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் எஸ் கே அக்ஷய்குமார் நடிகராக அறிமுகமானார் நடிகை அனீஸ்மா அனில் குமார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஏழு நாட்கள் படம் வெளியாகி ஆகிவிட்டன இந்த நிலையில் எவ்வளவு வசூல் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏழு நாட்கள் முடிவில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஆண்டில் ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளது.