ரோகினிக்கு ஏற்கனவே குழந்தை இருப்பதை தெரிந்து கொண்ட விஜயா.. அதிர்ச்சியில் குடும்பம்..

சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய எபிசோடில் மீனா வண்டியில் வந்து கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய தோழிகளை சந்திக்கிறார் அப்பொழுது சீதா போன் பண்ணி ஹாஸ்பிடலுக்கு வரும்படி கூப்பிடுகிறார்.

ஹாஸ்பிடலுக்கு வந்த மீனா சீதா இருவரும் பூ ஹாஸ்பிடலில் கொடுப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது எதற்கு ரோகிணி சக்கபிற்கு வர அவரை பார்த்த சீதா எதற்காக இவர் மறுபடியும் வந்துள்ளார் என யோசிக்கிறார் அதைக் கேட்டுக் கொண்டு வருகிறேன் என ரிசப்ஷனில் கேட்கிறார்.

உடனே இரண்டாவது குழந்தைக்காக வந்துள்ளார்கள் என ரிசப்ஷனில் கூறியவுடன் சீதா அதிர்ச்சடைகிறார் இதனை மீனாவிடம் கூறி என்ன என்று விசாரிக்க வேண்டும் என இருவரும் பேசிக்கொள்கிறார்கள் மீனா இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து ஏற்கனவே அவருக்கு குழந்தை பிறந்துள்ளதா என சந்தேகத்துடன் வீட்டிற்கு கிளம்புகிறார்.

வீட்டிற்கு சென்ற மீனா விஜயா எவ்வளவு கூப்பிட்டும் காதில் வாங்காமல் இதை நினைப்பில் இருக்கிறார் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் மீனா முகம் சோகமாக இருக்க ஸ்ருதி என்ன ஆச்சு என கேட்கிறார் அதற்கு ரோகிணிக்கு ஏற்கனவே குழந்தை இருக்கிறது என்பதை கூறுகிறார்.

இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என மீனா கூறிவிடுகிறார் ஆனால் ஸ்ருதி ரவியிடம் கூறுகிறார் ரவி இந்த விஷயத்தை முத்துவிடம் கூற முத்து அண்ணாமலையிடம் கூறுகிறார் இப்படி அனைவருக்கும் விஷயம் தெரிய ஒரு வழியாக அண்ணாமலை விஜயாவை கூப்பிட்டு கேட்கிறார்.

விஜயா என்னங்க நீங்க நம்ம மருமகளை பத்தி தப்பா பேசுறீங்க என விஜய் பேச உடனே ரோகிணியை அழைத்து ஏற்கனவே உனக்கு குழந்தை பிறந்துள்ளதா என விஜயா கேட்கிறார் இத்துடன் ரொம்ப முடிகிறது.