செல்வம் செய்த வேலை.. முத்துவுக்கும் மீனாவுக்கும் இடையே வெடித்த பிரச்சனை… கைதட்டி சிரிக்கும் விஜயா..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பிரியாணி சாப்பிட்டதால் ஒத்துக்காமல் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது என்னாச்சு என மீனா கேட்கிறார் அவரிடம் நீ கொண்டு வந்த சாப்பாட்டால் தான் இப்படி ஒரு பிரச்சனை எனக் கூறுகிறார்.

அப்பொழுது அண்ணாமலை மீனா கீரை பொரியல், குழம்பு என அட்டகாசம் பண்ணி இருந்தா அதை சாப்பிட்டால் எப்படி இப்படி ஆகும் என கேள்வி எழுப்புகிறார். உடனே வேண்டும் என்றே தான் நீ அந்த சாப்பாட்டை எடுத்துட்டு வராமல் கடையில் வாங்கி கொடுத்தாயா என கேள்வி கேட்கிறார் விஜயா.

அதற்கு ரோகிணி நீ கொடுத்த சாப்பாட்டால் தான் என பேசுகிறார் உடனே மீனாவிடம் அனைவரும் கேள்வி கேட்க எடுத்துக் கொண்டு போன சாப்பாட்டை என்ன செய்தாய் என கேட்கிறார்கள். அதற்கு இருவர் பட்டினியாக ரோட்டில் கிடந்தார்கள் அவர்களிடம் கொடுத்து விட்டேன் என கூறுகிறார்.

அதற்கு முத்து மீனாவை புகழ்ந்து பேசுகிறார் அதே போல் அண்ணாமலையும் மீனாவை புகழ்ந்து பேச என் வீட்டு சாப்பாட்டை தான தர்மம் பண்ண இவளுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பது போல் பேசுகிறார்.

ஒருவழியாக இந்த பிரச்சனை முடிய அடுத்ததாக அடுத்த ராத்திரியில் மனோஜ் விஜயாவுக்கு போன் பண்ணி மேலே வர சொல்லுகிறார் மொட்டை மாடியில் சென்றவுடன் மனோஜ்க்கு கொடுத்த லெட்டரை விஜயாவிடம் கொடுக்காததை படித்து பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைகிறார்.

அதே போல் அடுத்த நாள் ப்ரோமோவில் செல்வம் தன்னுடைய அப்பாவிற்குஅறுபதாவது கல்யாணம் என்பதால் என்னால் எதுவும் பண்ண முடியவில்லை என வருத்தப்படுகிறார். அப்பொழுது முத்து ஆறுதலாக பேசிவிட்டு மீனாவிடம் சென்று உண்டியலில் இருக்கும் காசை கேட்கிறார் ஆனால் மீனா கொடுக்க முடியாது என கூறுகிறார்.

உடனே இருவருக்கும் வாக்குவாதம் ஆகிறது சண்டை போட்டுக் கொள்கிறார்கள் இது விஜயாவுக்கு தெரிய வரப்போகிறது விஜயா சந்தோஷப்பட போகிறார்..