சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மற்றும் ரோகிணியின் ஃபிரண்ட் மகேஸ்வரி அனைவரையும் அழைத்துக் கொண்டு மீனா வித்யா வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு க்ரிஷ் பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது வித்யா ஓவர் ஆக்டிங் செய்கிறார் மொத்த உண்மையையும் மீனாவுக்கு தெரிந்து விட்டதை வித்யா புரியாமல் ஏதேதோ பேசுகிறார். கடைசியாக ஓவரா நடிக்காத என மீனா கூறியவுடன் அனைத்து உண்மையும் தெரிந்து விட்டது என்பதை தெரிந்து கொள்கிறார் வித்யா உடனே அந்தர் பல்டி அடித்து ரோகிணியை பற்றி கூறுகிறார்.
மீனா ரோகிணியை பார்த்து எப்பொழுது உண்மையை சொல்ல போகிறாய் என கேட்க இந்த ஆட்டத்தில் மீனாவையும் சேர்த்துக் கொண்டாயா என வித்தியா கூறுகிறார். ஒரு வழியாக ரோகிணி கதைக்கு உள்ள அம்மாவை நான் செத்துவிட்டதாக கூறுகிறேன் உடனே கிருஷ் வீட்டிற்கு வருவான் அப்பொழுது மனோஜ் மற்றும் க்ரிஷ் இருவரும் ஒன்றாக சேர்ந்து பழகுவார்கள் விரைவில் நான் உண்மையை சொல்லி விடுவேன் என ரோகினி கூறுகிறார்.
வீட்டிற்கு வந்த மீனா மற்றும் ரோகினி இருவரும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்க விஜயா என்ன பயமாக இருக்கு என கேட்கிறார் உடனே அதற்கு சமைப்பதற்கு பயமாக இருப்பதாக ரோகிணி கூற நீ எதற்கு சமைக்க வேண்டும் அந்த எஜமானி சமைக்க மாட்டாளா என விஜயா மீனாவை திட்டுகிறார். மற்றொரு பக்கம் முத்து சவாரி இருப்பதாக வெளியே செல்ல அதற்கு வேண்டாம் எங்கள் வீட்டில் இருங்கள் என கூறுகிறார் மீனா அதற்கு காரணம் கிரிஷ் வீட்டிற்கு வரும் பொழுது கண்டிப்பாக முத்து இருக்க வேண்டும் என்பதற்காக தான் அப்பொழுதுதான் விஜயாவை தடுத்து நிறுத்த முடியும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

