முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த ரோகிணி.. முத்துவின் பிடிவாதத்தால் இழக்கப்போகும் பணம்.. கொந்தளித்த மீனா..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் விஜயாவை அழைத்து லெட்டர் வந்ததை காட்டுகிறார் அதனை படித்துப் பார்த்த விஜயா அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் நான் இறந்து விடுவேனா என கேள்வி கேட்க மனோஜ் அதுக்கு ஒரு கதை சொல்லுகிறார்.

ஒருவேளை திருடன் வந்தால் அப்பாவை வெட்டி விட்டால் அவனை வெட்ட முத்து அருவாளை எடுத்து வெட்ட போகிறான் அந்த சமயத்தில் ரோகினியும் இறந்து விடுகிறார் அந்த கவலையில் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது இதனால் நானும் தற்கொலை செய்கிறேன் என கதை சொல்லுகிறார் மனோஜ்.

உடனே விஜயா எவனாவது உன்னை மெரட்ட இந்த மாதிரி அனுப்பி இருப்பான் எனக் கூறுகிறார். அந்த சமயத்தில் ரோகினி வர லெட்டர் பற்றிய மேட்டரை கூறுகிறார்கள். அதனை படித்துப் பார்த்துவிட்டு உன்னை மிரட்ட தான் யாரோ அனுப்பி இருப்பார்கள் இதை நினைத்து எதற்கு கவலைப்படாத வா தூங்கலாம் என கூப்பிட மனோஜ் தயக்கத்துடன் இருக்கிறார்.

உடனே ஒரு பாடிகார்ட் ரெடி பண்ணி கொள்ளலாம் இல்லையென்றால் செக்யூரிட்டி ரெடி பண்ணலாம் என ரோகிணி கூறுகிறார். மேலும் அடுத்த காட்சியில் ரோகினி தன்னுடைய அம்மா மற்றும் கிருஷ்க்காக ஒரு வீட்டை பார்க்க வந்துள்ளார் அந்த வீட்டுக்காரரிடம் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டதாகவும் என்னுடைய அம்மா மற்றும் என்னுடைய குழந்தை மட்டும் இங்கே தங்குவார்கள் எனவும் கூறுகிறார்.

மேலும் என்னுடைய கணவர் வெளிநாட்டில் இருப்பதாக கூறிவிடுகிறார் அவருக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் ஆகும் அதனால் இப்பொழுது துபாயில் இருக்கிறார் என முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கூறுகிறார் இதனை பார்த்த வித்யா அதிர்ச்சடைகிறார்.

சரளமாக பொய் சொல்லுகிறாய் எனவும் பேசுகிறார். மற்றொரு பக்கம் மீனா தன்னுடைய வீட்டிற்கு ஃபோன் பண்ணும் பொழுது சத்தியா ஏதோ ஸ்பெஷல் கிளாசுக்காக போய்க் கொண்டிருக்கிறார் என கூறுகிறார் இதனால் மீனா சந்தோஷப்படுகிறார் உன் தம்பி ஸ்பெஷல் கிளாசுக்கு பாட்டிலுடன் செல்வாரா என மனதுக்குள் பேசுகிறார் முத்து.

மற்றொரு பக்கம் செருப்பு தைக்கும் நபருக்கு சாப்பாடு கொண்டு செல்கிறார் மீனா அப்பொழுது எங்களுக்கு வேலை கொடுத்து விட்டார் ஒருவர் என முத்துவை காட்டுகிறார்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் மாற்றி மாற்றி புகழ்ந்து கொள்கிறார்கள்.

இன்னொரு பக்கம் செல்வம் குடித்துவிட்டு படுத்து கொண்டு இருப்பதால் முத்து ஏன் என்று கேட்க அதற்கு செல்வம் என்னுடைய அப்பா அம்மாவுக்கு 60-வது கல்யாணம் நடத்துவதற்கு என்னிடம் காசு இல்லை என புலம்புகிறார் இதனால் முத்து நீ ரெடி பண்ணு எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என சொல்லிவிட்டு மீனாவிடம் காசை கேட்கிறார் மீனா அதெல்லாம் முடியாது என மறுக்கிறார்.

இதனால் இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது அதேபோல் ஒரு செக்யூரிட்டியை மனோஜ் அப்பாயின்மென்ட் பண்ணி உள்ளார் ஆனால் அவர் சாப்பாட்டு செலவுக்கு 20,000 மேல் ஆகும் என புலம்புகிறார் மனோஜ் இத்துடன் எபிசோட் முடிகிறது.