உன் விஷயம் எல்லாமே மர்மமா இருக்கு.. நீ எப்போ கர்ப்பமான கோபத்தில் கொந்தளிக்கும் விஜயா..? மீனா மீது விழபோகும் பழி..?

சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பின் உச்சத்தில் போய்க்கொண்டிருக்கிறது தற்பொழுது ரோகிணி ஏற்கனவே கர்ப்பமாக இருந்துள்ளார் என்ற விஷயம் பூதகரமாக வெடித்துள்ளது.

இத்தனை நாளாக ரோகிணி எப்பொழுது மாட்டுவார் என பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அந்த எதிர்பார்ப்பு தற்பொழுது நிறைவேறி உள்ளது.

ஒரு வழியாக ரோகினி சிக்கி உள்ளார் ஆனால் இதிலிருந்து எப்படி தப்பிப்பார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் மீனா ஸ்ருதியிடம் ரோகிணி இரண்டாவது முறையாக கர்ப்பமாக ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார் என கூறுகிறார் இதனால் ஸ்ருதி அதிர்ச்சி அடைகிறார்.

உடனே இந்த விஷயத்தை ரவியிடம் சொல்ல ரவியும் அதிர்ச்சி அடைந்து முத்துவிடம் கூறுகிறார் முத்து அண்ணாமலை இடம் கூறுகிறார் இப்படி வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விஜயாவுக்கும் இந்த செய்தி செல்கிறது.

உடனே விஜயா ரோகினியை அழைத்து ரோகினியை பார்த்து நீ யார் உன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது உன் விஷயம் எல்லாமே மர்மமாக இருக்கிறது நான் கேட்கும் கேள்விக்கு எதையும் மறைக்காமல் உண்மையை மட்டும் சொல்ல வேண்டும் நீ முதல் தடவை எப்பொழுது கர்ப்பமானாய் என கோபத்துடன் கேட்கிறார்.

இந்த ப்ரோமோ மக்கள் மத்தியில் புயலை கிளப்பியுள்ளது வசமாக சிக்கிக் கொண்டார் ரோகிணி எனவும் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள் ஆனால் ஏதாவது சொல்லி கண்டிப்பாக ரோகிணி தப்பித்து விடுவார், மீனா வேண்டும் என்றே சொல்கிறார் என பழி விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.