சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜயா.. உள்ளே புகுந்து காப்பாத்தும் முத்து மற்றும் மீனா.. சிறகடிக்க ஆசை பரபரப்பான எபிசோட்..

siragadikka aasai promo
siragadikka aasai promo

சிறகடிக்க ஆசை சீரியலில் மாமியார் என்றாலே மருமகளை பிடிக்காது அந்த வகையில் விஜயாவுக்கு மீனா ஒரு ஏழை பெண் என்பதால் சுத்தமாக அவளை பிடிக்காது அதேபோல் முத்துவையும் பிடிக்காது. மீனா முத்து இருவரும் வீட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் அதனை கேட்டுக் கொண்டு தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் முத்து நேர்மையானவன் ஆகவும் மீனா நேர்மை வழிகளும் இருக்கிறார் இந்த நிலையில் விஜயா ஒரு டான்ஸ் கிளாஸ் நடத்தி வந்தார் அந்த டான்ஸ் கிளாஸ்சில் ஒரு காதல் ஜோடி இருக்கிறது. இந்த நிலையில் அந்த காதல் ஜோடி செய்யும் அட்டூழியங்களால் எப்பொழுது பூகம்பம் வெடிக்கும் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள புதிய ப்ரோமோவில்  அந்த காதல் ஜோடி பெண் திடீரென டான்ஸ் கிளாஸில் மயக்கம் அடைந்து விழுகிறார்.

உடனே அவரை பரிசோதித்த டாக்டர் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என கூறி விடுகிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். மேலும் அந்த பெண்ணின் அப்பா அம்மா முத்துவின் வீட்டிற்கு வந்து என் மகளை டான்ஸ் கிளாஸ் தான அனுப்பினா இப்படி பண்ணிட்டீங்களே. உங்களை நம்பி தானே அனுப்பனும் உனக்கெல்லாம் என்ன மரியாதை என அடிக்க கை ஓங்குகிறார் அப்பொழுது மீனா பேசிகிட்டு இருக்கும்போதே என்ன கை ஓங்குற என கையைப் பிடித்து தட்டி விடுகிறார் இதனால் விஜயாவின் மனது கலங்குகிறது.

உடனே முத்து வீர வசனம் பேசுவது போல் நான் இருக்கும் பொழுதே என் அம்மா மேல கைய வச்சிருவிங்களா பேச்சுவார்த்தைன்னா பேசுங்க இல்லனா என்ன நடக்கும்னு தெரியாது எங்க அம்மா மேல கைய வச்சு அவ்வளவுதான் எனக்கு கூறுகிறார் இதனால் விஜயாவின் மனசு கலங்குகிறது இத்துடன் எபிசோட் முடிகிறது.