போலீஸ் ஸ்டேஷனில் தர்ம அடி வாங்கிய ரவி, ஸ்ருதி.. கூனி குறுகி நின்ற அண்ணாமலை – சிறகடிக்க ஆசை இன்று எபிசோட்

Siragadikka Aasai today episode October 23 : இன்றைய எபிசோடில் ஸ்ருதி – ரவிக்கு டீ போட்டு கொடுக்கிறார் அப்பொழுது ரவி வீட்ல என்ன நடக்கிறதோ என்று சோகமாக இருக்கிறார்.. அதற்கு சுருதி இரண்டு நாள்ல எல்லாம் சரியாயிடும் பீல் பண்ணாத நம்ம ஜாலியா இருக்கலாம் என்று சொல்கிறார்.

பிறகு முத்து அண்ணாமலைக்கு இட்லி வாங்கிட்டு வந்து சாப்பிட சொல்லி கெஞ்சி கொண்டிருக்கிறார் ஆனால் அண்ணாமலை சாப்பிடவில்லை அதனால் எல்லோரும் சாப்பிடாமல் அழுதுகொண்டிருக்கின்றனர். பிறகு மீனா – ரவிக்கு என் மேல உங்களுக்கு உண்மையிலேயே மரியாதை இருந்தா எனக்கு போன் பண்ணுங்க என்று மெசேஜ் பண்ணி இருக்கிறார்.

சொந்த காசை கொடுத்து படக்குழுவினரை மீட்ட அஜித்..! முக்கிய பிரபலம் சொன்ன ரகசியம்

இதை ரவி பார்த்துவிட்டு உடனே மீனா அன்னிக்கு போன் பண்ண என்ன ரவி இப்படி பண்ணிட்டீங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு இப்படி ஏமாத்திட்டீங்களே உங்களால மாமா லாக்கப்ல இருக்காரு நாங்க எல்லோருமே வந்து ஸ்டேஷன்ல இருக்கோம் என்று சொல்ல.. ரவி அப்பா ஏன் லாக்கப்புக்கு இருக்காரு என்று கேட்க ஸ்ருதியோட அப்பா, அம்மா கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாங்க..

அதனால போலீஸ் மாமாவை அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சிருக்காங்க நீங்க இப்ப இங்க வரலைன்னா கடைசியா நான் செத்தா வருவீங்க இல்ல என்று சொல்ல ரவி உடனே நான் வரேன் என்று சொல்கிறார் பிறகு தூங்கிக் கொண்டிருந்த ஸ்ருதியை எழுப்பி அப்பாவை லாக்கப்ல வச்சிருக்காங்களாம் வா நம்ப உடனே போய் ஆகணும் என்று ஸ்டேஷனுக்கு வருகிறார்.

ஆல் ஏரியாவில் அண்ணன் கில்லி என்பதை நிரூபித்த விஜய்.. லியோ 4வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரவி ஸ்டேஷனுக்கு வந்ததும் முத்து ரவியை போட்டு பளார் பளார் என்று அடிக்கிறார் பிறகு விஜயாவும் ரவியை அடிக்கிறார்.. உடனே முத்து ரவி தான் வந்துட்டான்ல அவனைப் பிடிச்சு என்ன வேணா பண்ணிக்கோங்க எங்க அப்பாவ வெளிய விடுங்க என்று கேட்கிறார் அடுத்து ஸ்ருதியோட அப்பா அம்மாவும் ரவி எங்க பொண்ண மிரட்டி அழைச்சிட்டு போயிருப்பான்..

அவன பிடிச்சு ஜெயில்ல போடுங்க என்று சொல்ல ஸ்ருதி நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி எங்களோட விருப்பத்தோடு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்னை யாரும் கட்டாயப்படுத்தி அழைச்சிட்டு போல நாங்க ரெண்டு பேரும் மேஜர் நான் ரவி கூட தான் போவேன் என்று இருக்கிறார் இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.