முத்துவை கட்டி போட சொன்ன அரசியல்வாதி.. கணவனுக்காக கார் வாங்கப் போன மீனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

சிறகடிக்க ஆசை சீரியலில் 500 மாலையை ரவுடிகள் திருடி விடுகிறார்கள் அதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கிறார் அப்பொழுது அரசியல்வாதிக்கு கால் பண்ணி மாலையை கடத்தி விட்டார்கள் என கூறுகிறார் உடனே என்ன நாடகம் ஆடுறியா பணத்தை எடுத்துக்கிட்டு ஓடி போலாம்னு பாக்குறியா என அரசியல்வாதி மிரட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் இன்னும் அரை மணி நேரத்தில் மாலை வரலன்னா உன் பிரண்டுக்கு ஒரு மாலை உனக்கு ஒரு மாலை நானே ரெடி பண்ணிட்டு வந்துருவேன் என பேசுகிறார்.

அப்பொழுது முத்து அங்கும் இங்கும் தேடிப் பார்க்கிறார் உடனே ஒரே இடத்தில் நின்று இதுக்கு மேல் கிடைக்கும் என்ற நம்பிக்கையே கிடையாது எனக் கூறுகிறார் ஆனாலும் மீனா நம்பிக்கையை விட வேண்டாம் எனக் கூறுகிறார். உடனே அந்த வண்டியை வைத்து யாரிடமாவது விசாரிக்கலாம் என மீனா கூற முத்துவுக்கு ஐடியா தோன்றுகிறது.

அந்த வண்டி நம்பர் மற்றும் வண்டியை போட்டோ எடுத்ததை டிரைவர் குரூப்பில் அனுப்பி விடுகிறார் உடனே முத்துவின் நண்பன் செல்வன் பார்த்துவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார் அதே போல் டிரைவர் குரூப்பில் ஒருவர் பார்த்துவிட்டு ஆடியோவை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அந்த வண்டி கிராஸ் பண்ணிப்போகிறது உடனே அதனை பாலோ பண்ணிக் கொண்டே செல்கிறார்.

அந்த சமயத்தில் முத்துவுக்கு கால் பண்ணி நீ அனுப்புன வண்டிய நான் பார்த்துவிட்டேன் அதன் பின் தான் போய்க் கொண்டிருக்கிறேன் உடனடியாக வா முத்து என பேசுகிறார் லொகேஷன் அனுப்பு என கூற உடனே லொகேஷன் அனுப்பி விடுகிறார் ஆட்டோ அந்த டாட்டா ஏசி பாலோ பண்ணி போகிறார் முத்துவும் அங்கு வந்து விடுகிறார் பிறகு வண்டி மரித்து அவனை அடிக்கிறார்.

அவனை அடித்துக் கொண்டிருக்கும் பொழுது இன்னும் இரண்டு ரவுடிகள் வர முத்து எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறார் ஆனாலும் அதற்குள் மற்ற டிரைவர்கள் அனைவரும் வந்து விடுகிறார்கள் உடனே மாலையை எடுத்துக்கொண்டு கட்சி அலுவலகத்திற்கு செல்கிறார் முத்து ஆனாலும் கட்சித் தலைவர் முத்துவை பின்னாடி கட்டி போடுங்கள் என பேசுகிறார் அந்த சமயத்தில் மீனா எதற்காக எங்களை கட்டி போடணும் என பேச நீ யாருமா என கேட்கிறார் நான் அவருடைய வைஃப் எனக் கூறுகிறார்.

ராப்பகலா  கண் விழித்து மாலை கட்டுனது நான்தான் மாலையை கடத்துனது உண்மைதான் என பேசுகிறார் உடனே முத்து இவர்களை விட சொல்லுங்க என போனை எடுத்த ஆதாரத்தை காட்டுகிறார். அனைத்தையும் பார்த்துவிட்டு அப்ப நெஜமாலுமே கடத்திட்டாங்களா என பேசுகிறார் அரசியல் கட்சித் தலைவர். பிறகு பேலன்ஸ் அமௌண்டை கொடுக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் முத்து பிடித்து விட்டதால் முத்துவுக்கு 5 ஆயிரம் பணத்தை கொடுக்கிறார் அரசியல் கட்சித் தலைவர்.

அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வேலை செய்தவர்களுக்கு பணத்தை கொடுக்க சென்றார் மீனா ஆனால் அவர்கள் மீனாவுக்கு ஒத்தாசை செய்ய தான் நாங்க வந்தோம். பணம் எல்லாம் தேவையில்லை என கூறி விடுகிறார்கள் உடனே அடுத்து  மீனா அந்த பணத்தை எடுத்துக் கொண்டு முத்துவுக்கு கார் வாங்க செல்கிறார் அந்தக் கார் 3 லட்சம் என கூறுகிறார்கள் 80 ஆயிரம் கட்டி விடுங்கள் அதன் பிறகு தவணை முறையில் கட்டிக் கொள்ளலாம் என கூறுகிறார்கள் நான் பணத்தை ரெடி செய்து விட்டு வருகிறேன் என மீனா கூறி விடுகிறார்.