குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ரகளை பண்ணும் முத்து.. வேதனையில் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

Siragadikka Aasai today episode december 19 : இன்றைய எபிசோடில் முத்து அவரது நண்பர் செல்வத்துடன் சேர்ந்து பாருக்கு போகிறார். அங்கு முத்து எனக்கு கட்டிங் மட்டும் போதும் நிறைய குடிச்சிட்டு போனா அப்பா திட்டுவாரு என்று லைட்டாக குடித்துவிட்டு பிறகு வீட்டிற்கு வருகிறார்.. மீனா முத்துவிடம் சப்பாத்தி தக்காளி தொக்கு செஞ்சு வச்சிருக்கேன்..

சாப்பிடுங்க  என்று சொல்ல எனக்கு சாப்பாடு எல்லாம் வேண்டாம் ஒரு ஆம்லெட் மட்டும் போட்டு கொடு என்று முத்து கேட்பதும் மீனா சந்தேகப்பட்டு உள்ள வாங்க என்று கிச்சனுக்கு அழைச்சிட்டு போய் குடிச்சு இருக்கீங்களா என்று கேட்க முத்து இல்லையே நான் குடிக்கில  ஸ்டெடியா தான் இருக்கேன் என்று நடந்து காண்பிக்கிறார்.

காச வாங்கிட்டு போக ஹனிமூன் வந்திருக்காங்க ரவீனா மணியை ட்விட்டரில் காரித் துப்பும் ரசிகர்கள்… உண்மையை உடைத்த வனிதா..

பிறகு லைட்டா குடிச்சேன் என்ற உண்மையையும் ஒத்துக் கொண்டார். உங்களுக்காக மெனக்கெட்டு சப்பாத்தி செஞ்சு வச்சிருக்கேன் இப்படி சாப்பாடு வேணாம்னு சொல்றீங்க என்று முத்துவிடம் சண்டை போடுகிறார்.. அடுத்து ரவியும் சுருதியும் வீட்டிற்கு வருகின்றனர்.. அவர்களிடமும் மீனா சப்பாத்தி செஞ்சு வச்சு இருக்கேன் சாப்பிடுங்க என்று சொல்ல நாங்க வெளியவே சாப்பிட்டு வந்துட்டோம்..

அண்ணி சாரி சொல்லி இருக்கனும் என்று ரவி சொல்கிறார், மீனா சரி பரவால்ல விடுங்க என்று சொல்ல முத்து அது எப்படி நீங்க வெளியே சாப்பிட்டு வரலாம் உங்களுக்காக மெனக்கெட்டு மாங்கு மாங்குன்னு சப்பாத்தி செஞ்சி வச்சிருக்கா சாப்டே ஆகணும் என்று முத்து வலுக்கட்டாயமாக ரவியை உட்கார வைத்து சப்பாத்தியை வைத்து வாயில் திணிக்கிறார்.

எரிகிற நெருப்பால.. இல்லனா அவனுங்க ரத்தத்தால.. KGF யை விட பல மடங்கு மிரட்டும் பிரபாஸின் சலார் ட்ரைலர்.!

உடனே ஸ்ருதி உங்களுக்கு அறிவில்லையா இப்படி நடந்துக்கிறீங்க என்று முத்துவிடம் சண்டை போடுகிறார்.. பிறகு அண்ணாமலை எழுந்து வந்து என்ன என்று கேட்க ஸ்ருதி முத்து குடிச்சிட்டு வந்து பிரச்சனை பண்றாரு என்று சொல்ல அண்ணாமலை ஒன்னும் சொல்ல முடியாமல் தலை குனிந்து ரூமுக்கு சென்று விட்டார்.. பிறகு முத்து ரவி உன்னோட பர்த்டேக்கு மொட்டை மாடியில் உட்கார்ந்து நம்ப மூணு பேரும் குடிச்சோமே.,

ஞாபகம் இருக்கா என்று கேட்க ரோகினியம் ஸ்ருதியும் அவர்களது கணவரை பார்த்து முறைக்கின்றனர்.. மீனா முத்து விடம் இதுக்கு முன்னாடி ரோகினி முன்னாடி தான் என்ன அசிங்கப்படுத்துறீங்க இப்ப புதுசா வந்த பொண்ணு முன்னாடியும் குடிச்சிட்டு வந்து என்ன நீங்க அசிங்க படுத்துறீங்க என்று கேட்க முத்து நான் லைட்டா தானே குடிச்சிட்டு வந்தேன் என்று சொல்ல..

மீனா விஷத்தை கொஞ்சமாக குடிச்சாலும் அதிகமா குடிச்சாலும் உடம்புக்கு கெடுதல் தான அதையே திரும்பி பண்றீங்க என்று ரொம்ப வருத்தப்பட்டு முத்து விடம் பேசுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.