என் குழந்தைக்கு அப்பா மனோஜ் தான்… விஜயா தலையில் இடியை இறக்கிய ரோகிணி..

Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ஸ்ருதியிடம் ரோகிணி இரண்டாவது குழந்தைக்காக செக்கப் சென்றுள்ளார் என கூறுகிறார் இதனால் சுருதி அதிர்ச்சி அடைகிறார் இந்த விஷயத்தை யாரிடமும் கூறக்கூடாது எனவும் மீனா கூறிவிடுகிறார்.

ஆனால் சுருதி இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் ரவியிடம் கூறுகிறார் ரவி இதை யார் சொன்னது என கேட்க மீனா என்று சொல்ல அப்ப உண்மையாக தான் இருக்கும் என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் ஸ்ருதி கூறுகிறார்.

மேலும் ரவிக்கு பிரஷர் தாங்க முடியாமல் முத்துவிடம் கூறுகிறார் முத்து அதிர்ச்சி அடைந்து உண்மையாலுமா என கேட்க ஆமாம் என கூறுகிறார். நீயும் யார்கிட்டயும் சொல்லக்கூடாது என முத்துவை பார்த்து ரவி கூறுகிறார் ஆனால் ரவி அண்ணாமலை இடம் சென்று பார்லர் அம்மாவுக்கு இது இரண்டாவது குழந்தை எனக் கூற அண்ணாமலையும் அதிர்ச்சி அடைகிறார்.

இதை யார்கிட்டயும் சொல்லக்கூடாது எனவும் கூற அதற்கு அண்ணாமலை குடிச்சிட்டு ஒளராத கிட்டவா என கூப்பிடுகிறார் இந்நேரம் கீழே எல்லாரும் முன்னாடியும் சொல்லி இருப்பேன் இது முக்கியமான விஷயம் அதனால் தான் உங்ககிட்ட சொல்றேன் என கூறுகிறார்.

அண்ணாமலை விஜயாவிடம் சென்று ரோகிணி ஏற்கனவே கர்ப்பம் தரித்துள்ளார் எனக் கூற அதற்கு விஜயா அதிர்ச்சி அடைந்து நம்ம மருமகளையே நாம தப்பா பேசலாமா என பேசுகிறார்.

இது என்னன்னு சீக்கிரம் விசாரிக்கணும் இல்லையென்றால் அவ்வளவுதான் நம்ம குடும்ப மானம் கப்பலேறிவிடும் என நினைத்துக் கொண்டு விஜயா  ரோகிணியை  அழைத்து நீ எப்பொழுது கர்ப்பம் தரித்தாய் கல்யாணத்துக்கு முன்பாக கல்யாணத்துக்கு பிறகா  என கேட்கிறார்.

உடனே ரோகிணி ஆமாம் நான் கர்ப்பமாக இருந்தது உண்மைதான் ஆனால் அது ஆபாசன் ஆகிவிட்டது என ஒரு புதிய அணுகுண்டை வீசுகிறார். எங்க அப்பா ஜெயிலுக்கு சென்ற பொழுது நான் அழுது கொண்டே இருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு ஆபாசன் ஆகிவிட்டது என கூறுகிறார்.

என் வயிற்றில் வளர்ந்தது மனோஜ் குழந்தைதான் எனக்கும் மனோஜுக்கும் உருவான குழந்தை தான் என ஒரு கட்டுக்கதை கூறுகிறார். இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என விஜயா  கேட்க அப்பொழுது கன்ஃபார்ம் ஆனால் சொல்லலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கலைந்து விட்டது எனக் கூறுகிறார்.

ரோகிணி சொல்லும் கட்டுக்கதையை அனைவரும் நம்புகிறார்கள். அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ரோகிணி இப்படி ஒரு பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.