இந்த கிரீம் எல்லாம் போட்டா தான் உன் மூஞ்சி பாக்குற மாதிரி இருக்குமா என ரோகிணியை கழுவி உத்திய முத்து.. விறுவிறுப்பாக போகும் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka Aasai september 07 : சீரியல் இன்றைய எபிசோடில் முத்து வீட்டிற்கு மளிகை ஜாமான் டெலிவரி வந்து இருக்கு அதில் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற காஸ்ட்லியான ஐட்டம் இருப்பதால் இதெல்லாம் எதுக்கு என்று கேட்க ரோகினி தான் வாங்க சொன்னா என்று சொல்லுவதும் இவ்வளவு நாளா இந்த வீட்டுக்கு நீ சம்பாதிச்சு போட்ட பா உனக்கு இதெல்லாம் வாங்கி தந்தாங்களா என்று அப்பாவிடம் கேட்கிறார்.

மேலும் சில விலை உயர்ந்த கிரீம்கலும் அதில் இருக்கின்றன இதைப் பார்த்து விட்டு முத்து அப்ப இந்த கிரீம் எல்லாம் போட்டா தான் உன் மூஞ்சி பாக்குற மாதிரி இருக்குமா என ரோகிணியை கிண்டல் செய்கிறார் பிறகு உன் பொண்டாட்டிக்கு இதெல்லாம் தேவைனா நீ தான் மனோஜ் வாங்கி கொடுக்கணும் நான் ஏன் வாங்கி கொடுக்கணும் என்று முத்து சொல்வதைக் கேட்டு ரோகிணியால் தாங்கிக் கொள்ள முடியாமல் போதும் நிறுத்துங்க..

நான் வாங்குன பொருளுக்கு நானே பில் கொடுக்கிறேன் என்று ரூமில் இருந்து பணத்தை எடுத்துட்டு வந்து முத்து கையில் கொடுக்கிறார் பிறகு என் புருஷன் ஓட சம்பள பணம் வந்துரும் இனிமே வீட்டு மளிகை சாமானுக்கு நாங்களே மொத்த பணமும் கொடுத்துடுறோம் என்று சொல்லிவிட்டு ரூமில் போய் அழுது கொண்டிருக்கிறது.

மனோஜிடம் உங்க தம்பி என்ன இப்படி பேசுறாரு நீங்க ஒண்ணுமே கேட்காம அமைதியா நிக்கிறீங்க என்னை யாருமே இது மாதிரி பேசினதே இல்லை, எனக்கு தேவையானதை நீங்கதானே வாங்கி கொடுக்கணும் உங்கள நம்பி தான் நான் வந்து இருக்கேன் என்று பீல் பண்ணி பேசுகிறார் விஜயாவும் வந்து அந்த முத்து கடந்தா போறான்..

அவன் ஒரு தற்குறி நீ அதெல்லாம் பெருசா எடுத்துக்காதம்மா என்று சொல்கிறார். அடுத்து மீனாவும் முத்துவும் காரில் வெளியே சாப்பிட போகின்றனர். போற வழியில் ரோட்டோரத்தில் கிருஷ் ஓட பாட்டி மயக்கம் போட்டு விழுந்து கிடக்கிறார். மீனாவும், முத்துவும் யார் என்று பார்க்கலாம் என காரை விட்டு இறங்கி போய் பார்க்கின்றனர். அது கிரிஷ் ஓட பாட்டியாக இருப்பதால் உடனே தண்ணீர் தெளித்து எழுப்பி பார்க்கின்றனர்.

எழுந்திருக்கவில்லை என்பதால் காரில் ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போய் அட்மிட் செய்துள்ளனர். பிறகு கிருஷ் இடம் பாட்டிக்கு என்ன ஆச்சு என்று கேட்க திடீர்னு விழுந்துட்டாங்க என்று சொல்கிறான் பிறகு யார் வீட்டுக்கு இங்க வந்தீங்க என்று கேட்க அதற்கும் தெரியவில்லை என கிரிஷ் சொல்வதால் யாருக்கு தகவல் சொல்வது என தெரியாமல் முத்துவும் மீனாவும் குழம்பி நிற்கின்றனர்.

பிறகு டாக்டர் வந்து இவங்களுக்கு லோ பிரஷர் இருக்கு அதனால தான் மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க 24 மணி நேரம் அப்சர்வேஷன்ல இருந்தா தான கண் முழிச்சிடுவாங்க, நீங்க வேணும்னா நர்ஸ் கிட்ட நம்பர் கொடுத்துவிட்டு வீட்டுக்கு போங்க இவங்க கண் முழிச்சதும் போன் பண்ணி சொல்லுவாங்க என்று டாக்டர் சொல்லுகிறார். பிறகு முத்து கிருஷ் சாப்பிட்டு இருக்க மாட்டான் அதனால அவனை கூப்பிட்டு நம்ம வீட்டுக்கு போலாம் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..