ரோகிணி, க்ரிஷ் நீ பெத்த புள்ள.. முத்துமீனாவுக்கு இருக்கிற அக்கறை கூட உனக்கு இல்லையே.. நீ எல்லாம் ஒரு பொண்ணா..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது வீட்டில் உள்ளவர்களிடம் கிரிஷின் அம்மா கிரிஷை விட்டுவிட்டு போய்விட்டார். அவர் துபாயில் இருக்கிறார் எனக் கூறியவுடன் அனைவரும் ஆளாளுக்கு திட்டுகிறார்கள் அது மட்டுமே இல்லாமல் விஜயா ஆயிரம் தான் இருந்தாலும் பெத்த மகனை விட்டுட்டு போயிட்டாளே என பேசுகிறார்.

அதனால் தான் நாங்கள் தத்தெடுக்கலாம் என்று இருக்கிறோம் என முத்து அதிரடியாக கூறுகிறார் அப்பொழுது அனைவரிடமும் சஜஷன் கேட்க அதற்கு விஜயா இது என்ன சத்திரமா ஆளாளுக்கு வந்து தங்க என திட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் பெத்தவளே வேணான்னு விட்டுட்டு போயிட்டா நீ அவனை இங்க கூட்டிட்டு வரியா என திட்டுகிறார்.

உடனே முத்து நீங்க சொல்லுங்கப்பா உங்களோட முடிவு தான் எனக்கு முக்கியம் நீங்க சொன்னா போதும் என அண்ணாமலையை பார்த்து முத்து கேட்க அதற்கு அண்ணாமலை அவங்க ஏதோ நல்லது செய்யணும்னு நினைக்கிறாங்க அதுல நீ ஏன் குறுக்க வர என பேச உடனே முத்து சந்தோஷப்படுகிறார்.

அதே போல் சுருதியும் நீங்க நல்லது பண்ணனும்னு நினைக்கிறீங்க அதற்கு நாங்களும் சப்போர்ட் பண்றோம் என சுருதி கூற ரவியும் ஓகே கூறுகிறார் ஆனால் அதற்கும் விஜயா திட்டுகிறார் நீ ஒரு நாய்க்குட்டி கூட்டிட்டு வந்தியே அதற்க்கு நான் என்ன சொன்னேன் என கேட்க அதுதான் அடித்து துரத்திவிட்டிங்களே என பேசுகிறார் ரவி.

பாவம் இந்நேரம் அது எவ்வளவு கஷ்டப்படுமோ எனவும் பேச நாயே நான் வீட்டுக்குள்ள விடல அந்த பையனை மட்டும் விட்டுடுவேனா எனவும் பேசுகிறார் இதை அனைத்தையும் ரோகிணி கீழே நின்று கேட்டுக் கொண்டிருந்து கண்ணீர் வடிக்கிறார். மேலும் மனோஜ் உங்களுக்கு என்ன கல்யாணம் ஆகி ரொம்பநாள ஆகிடுச்சு தத்தெடுக்க நினைக்கிறீங்க என்று பேசுகிறார்.

அந்த பையன் இங்க வந்து ஏதாவது திருடிட்டு போயிட்டா என்ன பண்றது என பேச அதற்கு முத்து உன் அளவுக்கு யாரும் திருட மாட்டாங்க என பதிலடி கொடுக்கிறார். அந்த சமயத்தில் ரோகிணி வர வா ரோகிணி அந்த க்ரஷை இவங்க தத்து எடுக்க போறாங்களாம் என கூறுகிறார் விஜயா. அதற்கு முத்து யார் சொன்னாலும் சொல்லாட்டியும் அந்த பையன தத்து எடுக்க தான் போறேன் என கூறுகிறார் அப்பொழுது கிரிஷ் ஓட பாட்டி ஓகே சொன்னா முடிஞ்சிடுச்சு எனவும் பேசுகிறார்.

அதே போல் மீனா கிச்சனில் இருக்கிற சீதாவுக்கு  கால் பண்ணி நான் ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணி விட்டேன் டிகிரி முடித்துவிட்டேன் என கூறுகிறார் மீனா சந்தோஷத்தில் மிதக்கிறார் மற்றொரு பக்கம் ரோகிணி தன்னுடைய தோழியின் வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது போன ஜென்மத்தில் நீ நிறைய புண்ணியம் செய்து இருக்க அதனால் தான் இந்த ஜென்மத்தில் எவ்வளவு பொய் சொன்னாலும் மாட்ட மாட்டேன் என்கிறாய் என கிண்டல் அடிக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் ரோகிணி தன்னுடைய அம்மாவுக்கு போன் பண்ணி இனிமேல் மீனா மற்றும் முத்துவிடம் பேசக்கூடாது அவங்க கிரிஷை தத்தெடுக்க நினைக்கிறாங்க என் புள்ளையை தூக்கி கொடுக்க எனக்கு என்ன பைத்தியமா எனவும் பேசுகிறார். அதே போல் ரோகிணி அம்மாவையும் க்ரிஷையும் சென்னைக்கு கூட்டிக்கொண்டு வரப் போகிறேன் என் பக்கத்திலேயே இருந்தா அவங்கள நான் பாத்துக்க முடியும் எந்த தப்பும் நடக்காது எனவும் பேசுகிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.