மீனாவை திட்டியதால் விஜயா, மனோஜை அலறவிட்ட ஸ்ருதி.. இதுக்கு பேர் தான் ரிவேஞ்சா…

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவை விஜயா திட்டி இருந்தார் இந்த நிலையில் மீனா அடுத்த நாள் காலையில் சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு சென்று பூ கொடுக்க போகிறார் அப்பொழுது சீதா எங்கே என கேட்க சீதாவை அழைத்து வருகிறார்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நேத்தி வீட்டுக்கு போனியா என்ன ஆச்சு அந்த மேட்டர் என கேட்கிறார் சீதா.

அதற்கு மீனா அத பத்தி தயவுசெய்து பேசாத கடைசியில எல்லா பழியும் என் மேல தான் விழுது இனிமே அந்த மேட்டரை பத்தி எதுவும் விசாரிக்காத என பேசுகிறார்கள். உடனே சீதாவை ஹெச் ஆர் மேனேஜர் கூப்பிடுகிறார். இனிமேல் இந்த ஹாஸ்பிடலில் உனக்கு வேலை கிடையாது என அதிரடியாக கூறுகிறார் ஏன் என்று கேட்க  தேவையில்லாம க்ளைன்ட்டு டீடைல்ஸ் எதற்கு கேட்கிறாய் என கூறுகிறார்கள் அதற்கு சீத்த கெஞ்சி கூத்தாடி இனிமேல் கேட்க மாட்டேன் எனகூறுகிறார்.

இந்த மாசம் உனக்கு பாதி சம்பளம் தான் என எச்சார் மேனேஜர் கூறி தண்டனை கொடுக்கிறார் சீதாவிற்கு. அந்த சமயத்தில் மீனா வீட்டிற்கு செல்ல அப்பொழுது பூ கட்டுவதற்கு கூப்பிடுகிறார்கள் ஆனால் முத்து வருவார் அவருக்கு சாப்பாடு போட வேண்டும் என கூறிவிடுகிறார். ஆனால் முத்து போன் பண்ணி நான் சவாரிக்காக வெளியே செல்கிறேன் இரவு வர மாட்டேன் என கூறி விடுகிறார். சரி பூ கட்ட போகலாம் என மீனா அவர்களிடம் கேட்க பூ கட்டுபவர்களும் வேறு ஒரு ஆளை கூப்பிட்டு விட்டதாக கூறி விடுகிறார்கள்.

அப்பொழுது சுருதி வீட்டிற்கு வருகிறார் சுருதியிடம் ரவி போன் பண்ணி நான் வருவதற்கு லேட் ஆகும் எனக் கூற நான் கதவை திறக்க மாட்டேன் என சுருதி ஸ்ட்ரிட்டாக கூறுகிறார். அதனால் மீனாவிற்கு கால் செய்து ரவி நடந்ததை கூற நான் பார்த்துக் கொள்கிறேன் என மீனா கூறுகிறார். சமைத்துக் கொண்டிருந்த மீனா ஸ்ருதி இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டுவிட்டு  இரவு படுக்கப் போகும் பொழுது நாம் படம் பார்க்கலாம் என பேசிக்கொள்கிறார்கள்.

அப்பொழுது பேய் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மீனா அந்த பேய் படத்தை பார்த்து பயத்தில் இருக்கிறார் அலறி அடித்து கத்துகிறார் அப்பொழுது விஜயா வந்து எதுக்குடி கத்துகிட்டு இருக்க என கேட்டேன் பேய் படம் பார்த்தோம் அதான் கத்துறோம் என கூறுகிறார் நீயே ஒரு குட்டி சாத்தான் நீ பேய பாத்து கத்துறியா என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் விஜயா நாலாம் பேயே பார்த்தா லெஃப்ட் கையால துரத்தி விடுவேன் என கெத்தாக பேசுகிறார் இதனால் ஸ்ருதிக்கு கோவம் வருகிறது பேய் படம் பார்த்தால் யாராக இருந்தாலும் பயப்படுவாங்க என பேச விஜய்யா  திட்டிவிட்டு செல்கிறார் மீனாவை திட்டியதால் ஸ்ருதிக்கு கோபம் வருகிறது இன்று இரவு இவருக்கு சம்பவம் செய்ய வேண்டும் என சுருதி மொபைலில் பேய் சவுண்டை வைத்து போட்டு அலற விடுகிறார்.

இதனால் விஜயா கதறுகிறார் அதே போல் மனோஜும் அலறி அடித்து கத்துகிறார். ஸ்ருதி விஜயா விஜயா என கதவுக்கு அருகில் உட்கார்ந்து கூப்பிடுகிறார் இதைக் கண்ட விஜயாவும் பீதியில் உறைந்து இருக்கிறார் ஆனாலும் சுருதி விடுவது போல் தெரியவில்லை விஜயா இது என்னோட வீடு என கூற விஜயா பீதியில் உறைந்து இருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.