ரோகினிக்கு கட்டம் கட்டிய முத்து.. எலி பொரியில் சிக்க போகும் யானை.. தப்பிப்பாரா கல்யாணி

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ்க்கு மொட்ட கடுதாசி வந்துள்ளதால் அதனை யார் கொடுத்தார் என கண்டுபிடிப்பதற்காக கோவிலுக்கு செல்கிறார் அங்கு சாமியார் ஒருவர் அந்த நபர் என்னிடம் யார் என்பதை சொல்ல சொன்னார் என  ரஜினி பட பெயர் கொண்டவன் எனக் கூறுகிறார் உடனே மனோஜ் அண்ணாமலை முத்து என கூறிக் கொண்டே வர முத்து தான் செய்திருப்பான் என தவறாக புரிந்து கொண்டு முத்து மீது பழியை போட பார்க்கிறார்.

இந்த போட்டோவில் இருப்பவன் தானா என கேட்க அதற்கு ஆமாம் எனக் கூறி விடுகிறார் அதற்கு காரணம் ஏற்கனவே அந்த சாமியார் முத்துவிடம் அடி வாங்கியவர் முத்துவை மாட்டி விட தான் இப்படி ஒரு பொய் சொல்லி நாடகம் நடத்துகிறார். உடனே மனோஜ்  வீட்டில் போய் அனைவரிடமும் முத்து தான் இந்த மொட்டை கடுதாசி போட்டது என நம்ப வைக்கிறார் விஜயாவும் மீனாவை திட்டி வீட்டை விட்டு வெளியே போக கூறுகிறார்.

என் புருஷன் அப்படி செய்யுற ஆளே கிடையாது எதுவா இருந்தாலும் நேரடியாக தான் பேசுவார் எனக் கூற அதற்கு மறுத்த விஜயா நீங்க தான் செய்திருப்பீர்கள் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் உடனே முத்துவும் அந்த சமயத்தில் வர மனோஜை துரத்தி அடிக்க முயற்சி செய்கிறார் அப்பொழுது மனோஜ் வைத்திருக்கும் பாடி காட் முத்துவை தடுக்க முத்து கொடுத்த அடியில் அவன் சரிந்து விழுகிறான்.

நான் எதுக்கு இவனுக்கு மொட்டை கடுதாசி கொடுக்க போறேன் எனக்கு கோவம் வந்தா நேரடியா வந்து தூக்கி மிதிக்க போறேன் என பேசுகிறார் உடனே போலீசில் கம்ளைண்ட் கொடுக்கலாம் என கூற ரோகிணி லாபகரமாக தப்பித்து விடுகிறார். ஆனாலும் முத்து விடுவது போல் தெரியவில்லை அவன் யார் என்பதை நான் கண்டுபிடிக்கிறேன் எனக் கூறிவிட்டு செல்கிறார். தற்பொழுது ஒரு ப்ரோம்மா வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த பிரமோ வீடியோவில் மொட்டை கடுதாசி போட்டவன் யார் என்பதை கண்டுபிடித்து விட்டேன் அவனை ஏற்கெனவே நான் போலீஸில் பிடித்துக் கொடுத்திருந்தேன் அவன் பழிவாங்க தான் இது மாதிரி  செய்திருக்க வேண்டும் என முத்து பேசுகிறார்.

ஆனால் மனோஜ்க்கு மொட்டை கடுதாசி கொடுப்பதால் என்ன யூஸ் அங்க தான் இடிக்குது இதுல ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது அவனை புடிச்சு அடிச்சு நாலு தொவ தொவச்சா உண்மை தானா வரும் என கூறுகிறார்கள் இதனால் ரோகிணி வசமாக சிக்க இருக்கிறார் இதனால் ரோகிணி பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறார் இத்துடன் ப்ரோமோ  முடிகிறது.