என்னை வீழ்த்த எவண்டா இருக்கான்.. கடந்த வார டிஆர்பி ரேட்டிங்.. சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எந்த இடம் தெரியுமா..

சீரியலின் சிம்மாசனமாக இருக்கும் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அதேபோல் சன் தொலைக்காட்சிக்கு போட்டியாக இருப்பது விஜய் தொலைக்காட்சி தான் எப்படியாவது சன் டிவியை வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதே போல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு சில சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

அப்படிதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது முதல் இடத்தில் இருந்து வருகிறது முதல் இடத்திலிருந்து கொண்டு கெத்து காட்டும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் கதையை ரோகிணியின் அம்மா முத்து மற்றும் மீனா விடம் கூறிக் கொண்டிருக்கிறார் ஆனால் ரோகிணி தான் கிரிஷின் அம்மா என்று இதுவரை யாருக்கும் தெரியாது.

மற்றொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா பிளாங்க் செக் எடுத்துக் கொண்டு வந்து ரவியிடம் கொடுத்து எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் குழந்தையை மட்டும் தள்ளி போடாதீர்கள் என கூறுகிறார்.

இப்படி சிறகடிக்க ஆசை கொஞ்சம் கூட சோர்வடையாமல் இன்னும் பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கிறது இந்த நிலையில் டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரமும் முதலிடத்தில் இருந்து வருகிறது அதே போல் முதலிடத்தில் இருந்த சிங்க பெண்ணே சீரியல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

டிஆர்பி டாப் 5 இருக்கும் சீரியல்களை இங்கே காணலாம்.

முதலிடத்தில் சிறகடிக்க ஆசை, இரண்டாவது இடத்தில் சிங்க பெண்ணே, மூன்றாவது இடத்தில் கயல், நான்காவது இடத்தில் மருமகள், ஐந்தாவது இடத்தில் பாக்கியலட்சுமி.