சாந்தி முகூர்த்தத்தில் இருந்து தப்பிக்க மீனா விடம் கெஞ்சும் முத்து.! சிறகடிக்க ஆசை இன்றைய ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் எப்படியாவது முத்து மீனாவை சேர்த்து வைத்து விட வேண்டும் என்பதற்காக பாட்டி பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து மீனாவிற்கு ஏதாவது ஆபத்து வந்து கொண்டே இருக்கும் நிலையில் இதனை காரணமாக வைத்து முத்து மீனாவிற்கு சாந்தி முகூர்த்தத்தை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார். அப்படி முத்து மீனாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்ற நிலையில் ஜோசியரிடம் ஜாதகத்தை கொடுத்து நல்ல நாளை பார்க்க சொல்கிறார்கள்.

இதன் மூலம் இன்றைக்கு நல்ல நாள் தான் சாந்தி முகூர்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் என ஜோசியர் சொல்ல முத்து நீங்க இப்படி ஏதாவது பண்ணுவிங்கன்னு எனக்கு தெரியும் நான் ஊருக்கு கிளம்புறேன் என கூற அதற்கு பாட்டி போடா போ இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காத என அதை இதையும் கூறி பிறகு முத்துவை ஒரு வழியாக சாந்தி முகூர்த்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் இரவு ஆனவுடன் முத்து பாட்டியிடம் பிரண்ட்ஸ பாக்கணும் எப்பயாவது ஒரு டைம் தான் பாட்டி பார்க்க முடியும் என தொடர்ந்து கெஞ்சி கொண்டே இருக்க பிறகு அன்னத்தின் அக்கா போய்ட்டு வரட்டுமே என சொல்கிறார்.

அதற்கு நான் எப்படி சொல்ல முடியும் அவனுடைய பொண்டாட்டி சொல்லட்டும் என மீனாவை சொல்ல சொல்ல முத்து கண்ணை காட்டுகிறார் இதனை பார்த்த பாட்டி என்ன முத்து மூஞ்சி ஒரு பக்கமா போகுது என சொல்ல பிறகு அவளே சொல்லட்டும் என சொல்கிறார். மீனாவும் பாவம் பாட்டி போயிட்டு வரட்டும் எனக் கூற பாட்டி போயிட்டு சீக்கிரம் வரணும் என சொல்ல இங்கதான் பாட்டி கூப்பிட்டீங்கன்னா உடனே வந்து விடுவேன் என கூறுகிறார் இதோட இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.