சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சீதாவிடம் மீனாவை பற்றி விசாரிக்க உடனே சீதா மீனாவிடம் கேட்கிறார் அதற்கு அத்தை தத்தெடுக்க ஒத்துக்க மாட்டாங்க அதனால் இந்த தத்தெடுக்குற விஷயத்தை இதோட விட்டுடுங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட பேச சொல்லுங்க என கூறிவிட்டு மீனா செல்கிறார்.
அடுத்த காட்சியில் விஜயா பார்வதி வீட்டில் இருக்கிறார் அப்பொழுது மீனாவின் தம்பி ஒரு பெண்ணை அழைத்து வந்து விடுகிறார் அவர் வேறு யாரும் கிடையாது மீனாவிடம் வம்பு இழுக்கும் அந்த பெண்னின் மகள் தான். உடனே அந்த பெண்ணின் அம்மா அவரை திட்டுகிறார். மேலும் இருவரும் வீட்டிற்கு செல்ல அங்கு விஜயா உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
விஜயாவிடம் என்ன மாஸ்டர் என கேட்க உடனே நீ வா மேலே போய் பார்வதி ரூமில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அந்த குட்டிச்சாத்தானை எப்படி விரட்டுவது என்று தெரியவில்லை என பேச. ஆனால் பார்வதிக்கு கொஞ்சம் கூட இது பிடிக்கவில்லை, அதனால் வெளியே செல்கிறார். மற்றொரு பக்கம் அவன் டீக்கடையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது முத்து டீ குடிக்க செல்கிறார் ஆனாலும் முத்து இங்கு வேண்டாம் என தடுத்தும் முத்துவின் நண்பர் அவன் இருந்தா நமக்கென்ன நம்ம பற்றி டீ குடிச்சிட்டு கிளம்பிடலாம் என கூறுகிறார்.
அதே போல் அருண் சாடமடையாக முத்துவுக்கு குழந்தை பிறக்காது உனக்கெல்லாம் எப்படி பிறக்கும் என சாடமடையாக பேச முத்து கோபப்பட்டு அருனை தாக்குகிறார் இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அப்பொழுது அண்ணாமலை பார்த்து விடுகிறார் அண்ணாமலை முத்துவை அடிக்கிறார். பிறகு வீட்டிற்கு வந்து அண்ணாமலை மீனா விடம் நடந்ததைக் கூற மீனா முத்துவை எதுக்காக இப்படி சண்டை போடுறீங்க என கேட்கிறார்.
எல்லா பிரச்சனைக்கும் நீ தான் காரணம் கிரிஸ் என்ன மாதிரி ஆயிடக்கூடாது என்பதற்காக தான் நான் இவ்வளவு பாடுபடுறேன் ஆனா முதலில் தத்தெடுக்கலாம் என்று நீ சொன்ன இப்ப வேண்டாம் என்று சொல்ற காரணம் கேட்டா சொல்ல மாட்ற இதுதான் பிரச்சனை அதனால தான் சீதாவிடம் கேட்டேன் சீத்தா அருணிடம் சொல்லி இருக்கலாம் அதனாலதான் அவன் என்ன சாடமடைய பேசுனான் அதுதான் பிரச்சனை என பேசுகிறார் உடனே மீனா ரோகினியை பார்க்கிறார் ரோகிணி பீதியில் நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.