சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் சொத்தை பிரித்துக் கொடுக்க கேட்கிறார் அண்ணாமலை சொத்தை நாலு பங்காக பிரித்து எழுத வேண்டும் என கூறுகிறார். அதற்கு முத்து எக்காரணத்தைக் கொண்டும் சொத்தை பிரிக்கக் கூடாது அப்படியே பிரித்தாலும் நீங்கள் இருக்கும் வரை அதனை விற்கக் கூடாது என முத்து கூறுகிறார்.
உடனே மனோஜ் நான் சொத்தை கேட்டு கோர்ட்டுக்கு செல்வேன் என கூற முத்துவுக்கு கோவம் வந்து மனோஜை அடிக்கிறார். இவர்கள் அடித்துக் கொள்வதை பார்த்த அண்ணாமலை எங்கேயோ சென்று விடுகிறார். உடனே வீடு முழுவதும் தேடி அண்ணாமலையை காணாததால் எல்லாத்துக்கும் காரணம் நீதான் என மனோஜை அடிக்கிறார்.
உடனே முத்து விடம் விஜயா எங்கிருந்தாலும் என்னுடைய வீட்டுக்காரரை அழைத்து வர வேண்டும் என கதறி அழுகிறார்..