சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷை பிஏ கடத்திக்கொண்டு ரோகிணியிடம் இரண்டு லட்சம் பணம் கேட்கிறார். யார் கடத்தியது என்று புரியாமல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் குழப்பத்தில் இருக்க ரோகிணி மீனாவிடம் நடந்த உண்மையை கூற இன்னும் எவ்வளவு விஷயம் மறப்பியோ எனக்கு தெரியல எனக் கூறுகிறார்.
உடனே மனோஜ்க்கு போன் செய்து பிஏ வை பணம் கேட்க சொல்கிறார் ரோகினி. அதேபோல் பணத்தை எங்கே எடுத்துக் கொண்டு வர வேண்டும் என வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கேட்க சொல்கிறார்கள் அதேபோல் மனோஜ் கேட்க ஒரு இடத்தில் பணத்தை வைத்து விட்டு பிஏ மனோஜை செல்ல சொல்கிறார் பணத்தை வைத்து விட்டு மனோஜ் சென்று விடுகிறார் உடனே பணத்தை எடுக்க வந்த பிஏ வை முத்து விரட்டி பிடிக்கிறார்.
அந்த சமயத்தில் தப்பித்துப் போக அந்த வழியாக வந்த அருணிடம் கிரிஷை கடத்தியது அவன்தான் அவனை பிடிக்க வேண்டும் என உதவி கேட்கிறார் அருணும் அவரை துரத்தி செல்கிறார்.