டேய் பைத்தியம் கல்யாணி என்ன சொன்னாலும் நம்புவியா..? மனோஜை உச்சி குளிர வைத்த ரோகிணி..

siragadikka aasai today episode : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து தன்னுடைய மனைவி மீனாவை சவாரி செல்லும் பொழுது பேய் மாதிரி என சொன்னதால் மீனா கோபத்தில் இருக்கிறார் அதனை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என முத்து முயற்சி செய்கிறார்.

அதனால் அல்வாவை வாங்கிக் கொண்டு வந்து மீனாவிடம் கொடுத்து வெள்ளை கொடியை காட்டுகிறார் இதற்கு மேல் சண்டை வேண்டாம் ஏதாவது சொன்னாதான் சவாரிக்கு வருவாங்க அதனால்தான் அப்படி பேசினேன் என கூறுகிறார்.

ஒரு வழியாக இருவரும் சமாதானம் ஆகி கொசுவலை உள்ளே சென்று அல்வா சாப்பிடுகிறார்கள். அடுத்த நாள் மனோஜ் கோவமாக வெளியே நிற்கிறார் அப்பொழுது ரோகிணி வருகிறார். என்ன மனோஜ் என் மீது கோபமாக இருக்கிறாயா என கேட்க நீ என்ன என்கிட்ட பொய் சொல்லி இருக்கியா இல்ல ஏதாவது மறைச்சு இருக்கியா நான் எதுக்கு உன் மேல கோவப்படணும் என கேட்கிறார்.

அதிலிருந்து மனோஜ் ரோகிணி மீது கோபத்தில் இருக்கிறார் ஏனென்றால் ரோகினி மனோஜிடம் வித்தியாவுடன் இருப்பதாக பொய் சொன்னார் ஆனால் வித்யா கடையில் தான் இருந்தார் இதனால் கையும் களவுமாக ரோகிணி மாட்டிக் கொண்டார்.

உடனே மனோஜ் என்கிட்ட பொய் சொல்லிட்டு யார் கூட போன என கேட்கிறார் அதற்கு ரோகிணி நீ கொஞ்சம் பொறுமையா இருக்கியா நான் சொல்றத கேளு என கெஞ்சுகிறார். ஆனாலும் மனோஜ் பொறுமைய இழந்து இந்த மாதிரி எத்தனை டைம் பொய் சொல்லிட்டு போயிருக்க என கேட்கிறார்.

உடனே ரோகினி மனோஜ் கொஞ்சம் அமைதியா இருக்கியா எதுக்காக போனேன் தெரியுமா இந்த மாலையை வாங்க தான் என கருங்காலி மாலையை காட்டுகிறார் இது உன் கழுத்தில் இருந்தா உனக்கு நல்லது நடக்கும் என்று சாமியார் சொன்னாங்க என ஒரே உருட்டாக உருட்டுகிறார்.

அதை என்கிட்ட சொல்லிட்டே போகலாமே என மனோஜ் கேட்க அதை சொன்னா எப்படி சர்ப்ரைஸா இருக்கும் என ஒரேடியாக மனோஜ் வாயை மூடுகிறார். அதேபோல் அந்த நேரத்தில் கொரியர் வருகிறது அதில் கல்லை அனுப்பியதாக கூறுகிறார்கள். உடனே பாட்டி தான் அனுப்பி இருக்கிறார்கள் என அனைவரும் சொல்ல.

இத்தனை மூட்டை எதற்கு நாம் ஒரு மூட்டை வாங்கிக் கொண்டு மற்றவர்களிடம் தெரிவித்து கொடுத்துவிடலாம் என அண்ணாமலை கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் மனோஜ் எனக்கு கொஞ்சம் கட்டளை வேணும் எங்க ஷோரூமுக்கு வருபவர்களிடம் ஃப்ரீயாக கடலை கொடுப்பேன் என கூறுகிறார்கள்.

உடனே முத்து அவரை கிண்டல் செய்ய ரோகிணி எதற்கு இப்படி பேசுகிறார் என கேட்க மீனா உடனே வாய மூடுங்க என முத்துவை பார்த்து கூறுகிறார். பிறகு ஆளாளுக்கு கடலையைப் பிரித்துக் கொள்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.