பங்கமாய் மாட்டிக் கொண்ட அருண்.. ரோகிணிக்கு ஐடியா கொடுத்த முத்து.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

siragadikka-aasai-sep2
siragadikka-aasai-sep2

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கடைக்கு வந்து அந்த பெண் மற்றும் அவர் கணவர் டிவி மற்றும் பிரிட்ஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு மனோஜ் முடியாது எனக் கூற  உடனே வக்கீல் நாங்க போலீஸ் கிட்ட போவோம் மானம் பெருசா இல்ல பொருள் பெருசா என யோசித்துக் கொள்ளுங்கள் என மிரட்டுகிறார்கள்.

உடனே ரோகிணி போலீஸ் எல்லாம் வேண்டாம் என கூறிவிட்டு மனோஜை தனியாக அழைத்து சென்று போலீஸ் கிட்ட போனோம் என்றால் நாம சொல்வதை நம்ப மாட்டாங்க அவங்க சொல்றத தான் நம்புவாங்க நமக்கு அவமானமா போகும் நம்ம மானமே போய்விடும் என மிரட்டி பணிய வைக்கிறார்.. ஒரு வழியாக டிவி மட்டும் தான் கொடுப்பேன் என மனோஜ் ஒப்புக்கொள்ள டிவி மட்டும் கிடையாது பிரிட்ஜ் வேண்டும் என அழுத்தமாக கூற ஏதாவது எடுத்துக்கிட்டு போங்க என கூறிவிட்டு செல்கிறார்.

நடந்த அனைத்தையும் ஸ்ருதி மற்றும் ரவியிடம் கூறிக் கொண்டிருக்கிறார் மனோஜ் மற்றும் ரோகிணி அப்பொழுது முத்து வர என்ன பிரச்சனை என கேட்க அந்த பொண்ணு மனோஜ மெரட்டி காசு வாங்கிக் கொண்டிருக்கிறார் என கூறுகிறார் என்ன மிரட்டுறாங்க என கேட்க அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கிட்டன்னு சொல்றாங்க என பேச முத்து சிரிக்கிறார்.

இவன் போய் தப்பு பண்ணினானா யாரு நம்புவா இதை என பேசுகிறார். உடனே இதுக்கு ஏதாவது ஒரு ஐடியா பண்ணனும் ஒரு வழியாக போலீஸ் இடம் போகலாம் என கூறுகிறார்கள் அதற்கு போலீஸ் கிட்ட போனோம்னா நாம தப்பு பண்ண மாதிரி அவங்க பேசுவாங்க என பேசுகிறார் ரோகிணி. அதற்கு அது எப்படி உடனே நம்பிடுவாங்களா விசாரிக்க மாட்டாங்களா என கூறுகிறார்கள் அதற்கு ரோகிணி பயந்து கொண்டு பேசுகிறார்.

ஒரு வழியாக மனோஜ் ஒரு ஐடியா சொல்லுகிறார் எப்படி அவன் பொண்டாட்டி கிட்ட நான் தப்பு பண்ணினேன் என்று சொல்கிறானோ ரோகிணி கிட்ட அவன் தப்பா நடந்துகிட்டான்னு சொல்லி நாமும் ஒரு கேஸ் கொடுப்போம் என கூறுகிறார். அதற்கு வீட்டில் உள்ள அனைவரும் மனோஜை வில்லனை பார்ப்பது போல் பார்க்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் மீனா நீங்க மாட்டிக்கிட்ட என்று ரோகினியை தப்பாக சித்தரிக்காதீர்கள் எனக் கூறுகிறார்.

உடனே முத்து ஒரு ஐடியா சொல்கிறார் அவங்க வாயாலேயே உண்மையை வரவழைத்து ஒரு வீடியோ ரெக்கார்டிங் பண்ணிடலாம் அதுதான் சரியான ஐடியா எனக் கூற  அனைவரும் அதற்கு ஓகே என்று சொல்கிறார்கள் அப்பொழுது முத்துவுக்கும் ஐடியா வருகிறது எப்படியாவது அருணை சிக்க வைக்க வேண்டும் என முயற்சி செய்து இந்த ஐடியாவை ஒர்க்கவுட் செய்து பார்க்கலாம் என கூறுகிறார்.

உடனே சீதாவை சென்று முத்து பார்க்கிறார் நீங்க ரெண்டு பேரும் ஒரே வயித்துல பிறந்தவங்க எதற்காக இப்படி அடித்துக் கொள்கிறீர்கள் நாங்கள் இரண்டு பேரும் இப்போதுதான் வந்தோம் நானே எதையும் பெருசா எடுத்துக்கல நீ எதுக்கு மீனா கிட்ட பேசாம இருக்கிறார் என சீதாவை பார்த்து பேசுகிறார்.

இப்ப என்ன நான் உன் புருஷனை ஆள் வச்சு அடிச்ச நீயும் அத நம்புற அவ்வளவுதானே எனக்கு கொஞ்சம் டைம் கொடு கண்டிப்பாக நிரூபிக்கிறேன் எனக் கூறிவிட்டு வீட்டுக்கு செல்கிறார் அப்பொழுது. அடுத்த நாள் காலையில் அருணிடம் முத்து வான்டடாக பேசிக் கொண்டிருக்கிறார் நான் உன்னை ஆள் வச்சு அடிக்கணும்னு எனக்கு அவசியமே கிடையாது நானே அடிப்பேன். நீ தேவையில்லாம சீதா மனசுல வஞ்சத்தை விதைக்கிற என பேச ஆமா நீ அடிக்கவில்லை என்று எனக்கு நல்லாவே தெரியும் ஆனா உன்ன அந்த வீட்ல எல்லாரும் தெய்வம் மாதிரி பார்க்கிறாங்க அது எனக்கு பிடிக்கல அதனாலதான் இப்படி செஞ்சேன் என கூறுகிறார்.

இப்ப நிஜமாவே நான் ஆள் வச்சு அடிக்கப் போகிறேன் எனக்கூறி விட்டு இப்ப எல்லாம் புரிஞ்சுச்சா இப்ப நீ வெளியில வா என சீதாவை கூப்பிடுகிறார் உடனே அருண் சீதாவை பார்த்து மிரண்டு போய் நிற்கிறார் அனைத்தையும் கேட்டுவிட்டு சீதா வெளியே வருகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.