சிறகடிக்க ஆசை : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ஒரு ஜோசியரை சென்று பார்க்கிறார் அவர் இன்னும் ஆறு வருடங்களுக்கு நீ முத்துவை பார்க்க கூடாது பேசக்கூடாது என்பது போல் கூறி விடுகிறார்கள் அதனால் முத்துவை அழைத்துச் சென்று பாட்டி வீட்டில் விட்டு விடுகிறார் விஜயா.
முத்து பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறார் பழைய கதையை முத்து மீனா விடம் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜயா பெத்த மனது தாங்காமல் ஒருமுறை முத்துவை பார்க்க செல்கிறார். அப்பொழுது முத்து ஒருவனை போட்டு அடிக்கிறார் அதற்கு காரணம் சின்ன பசங்களை அந்த பையன் அடித்ததால் முத்து அவனை அடிக்கிறான்.
இதனை பார்த்த விஜயா முத்து தன்னை பார்த்து விடாமல் வீட்டிற்கு செல்கிறார். வீட்டிற்கு சென்று போனின் பாட்டியிடம் பேசுகிறார் அப்பொழுது முத்து ஒருவனை அடித்தான் என்பதை கூற அதற்கு பாட்டி ஆமாம் நானும் விசாரித்தேன் முத்து தவறு செய்தவனை தான் அடித்தான் இப்பையே அவனுக்கு நல்லது கெட்டது தெரிகிறது என கூறுகிறார்.
அதே போல் மற்றொரு பக்கம் மனோஜ் படிப்பில் அதிக இன்ட்ரஸ்ட் காட்டி படித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் முத்து தன்னுடைய நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது தன்னுடைய நண்பர்களை அவரவர் அம்மாக்கள் சாப்பிட அழைத்து செல்கிறார்கள் ஆனால் முத்துவுக்கு யாருமே வரவில்லை அதனால் முத்து வருத்தப்படுகிறார்.
தன்னுடைய அம்மாவை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் முத்து போன் பண்ணுகிறார் அப்பொழுது அண்ணாமலை எடுத்து பேசிக் கொண்டிருக்க அம்மாவிடம் பேச வேண்டும் என்று முத்து கூற அதற்கு மனோஜ் எனக்கு சொல்லிக் கொடுங்க இல்லையென்றால் எனக்கு மறந்துவிடும் என தன்னுடைய அம்மாவை தனது வாசம் மாற்றுகிறார் முத்து சோகமாக போனை வைக்கிறார்.
ஒரு வழியாக ஆறு வருடம் முடிகிறது முத்து பெரிய பையனாக மாறி சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டிருக்கிறான் சைக்கிள் ஓட்டி விட்டு வீடு வருகிறான் அப்பொழுது விஜயா மற்றும் அண்ணாமலை மனோஜ் மூவரும் முத்துவை அழைக்க பாட்டி வீட்டிற்கு செல்கிறார்கள் அப்பொழுது முத்துவை வீட்டிற்கு அழைக்கிறார்கள் அதற்கு முத்து நான் பாட்டியுடன் இருக்கிறேன் என திட்டவட்டமாக கூற அதெல்லாம் முடியாது இதுக்குமேல் உன்னை இங்க விட முடியாது என பேசுகிறார்கள்.
ஒரு வழியாக முத்துவை வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள் அப்பொழுது மனோஜ் சாப்பிட்டு கொண்டிருக்கிறார் உடனே மனோஜ் எனக்கு ஒரு ஆம்லெட் என கேட்க முத்து சாப்பாடு தட்டை தூக்கி தூர வீசுகிறார். அது மட்டும் இல்லாமல் மனோஜ் தட்டையும் பிடுங்கி தூக்கி வீசுகிறார் இதனால் விஜயா முத்துவுக்கு காலில் சூடு போடுகிறார். முத்து தன்னுடைய பாட்டிக்கு போன் செய்து அம்மா தனக்கு சூடு போட்டதை கூறுகிறார்.
இதனால் பாட்டி கோபப்படுகிறார் அதே போல் அடுத்த நாள் மனோஜ் ஸ்கூலில் நல்லா படித்து நல்ல பெயர் எடுக்கிறார் அதேபோல் மனோஜிடம் மற்றவர்கள் உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா என கேட்க மனோஜ் அம்மா எனக் கூற அதேபோல் முத்துவிடம் கேட்க எனக்கு பாட்டி மட்டும்தான் பிடிக்கும் என கூறுகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.